பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீராங்கனைகள் பேட்மிண்டனில் வெள்ளி, வெண்கலம் வென்றனர்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. மகளிர் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர், எஸ்யு 5 பிரிவின் இறுதிப் போட்டி மற்றும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று நடைபெற்றது.

இதில் இறுதிப் போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன் சீனாவின் கியு ஹ்யா யங்-ஐ எதிர்கொண்டு விளையாடினர். இந்த போட்டியில் துளசிமதி முருகேசன் 17-21, 10-21 என்ற செட் கணக்கில் க்யு ஹ்யா யங்கிடம் தோல்வி அடைந்தார். இதனால் துளசிமதி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றி உள்ளார்.

இதே பிரிவில் (பெண்கள் ஒற்றையர் எஸ்.யு. 5 பிரிவு) வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் மனிஷா ராமதாஸ், டென்மார்க்கின் கேத்ரின் ரோசன்கிரென் உடன் மோதினார். இந்தில் அபாரமாக செயல்பட்ட மனிஷா ராமதாஸ் 21-12, 21-8 என்ற செட் கணக்கில் கேத்ரின் ரோசன்கிரெனை வீழ்த்தினார்.

இதனால் தமிழகத்தை சேர்ந்த மனிஷாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இந்த இரு பதக்கங்களை சேர்த்தால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. இந்தியா இதுவரை 2 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 11 பதக்கங்களை வென்றுள்ளது.

Related posts

Leave a Comment