ஜார்க்கண்ட் மாநிலத்தில் பரிதாபம்-காவலர் உடற்தகுதி தேர்வில் மயங்கி விழுந்து 11 பேர் உயிரிழப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற காவலர் உடற்தகுதி தேர்வில் பங்கேற்ற 11 போட்டியாளர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடும் வெயிலில் 10 கி.மீ தூரத்திற்கு அவர்கள் ஓடிய நிலையில், இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பயிற்சியின் போது மயங்கி விழுந்ததால் சுமார் 100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

11 பேர் உயிரிழந்ததை இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Leave a Comment