புதுச்சேரி,செப்.5-வலிமை மிக்க பாரதத்தை உருவாக்க ஆசிரியர்கள் மாணவர்களை வழி நடத்த வேண்டும் ஆளுநர் கைலாஷ் நாதன் வாழ்த்து
புதுச்சேரி துணைநிலைஆளுநர் கைலாசநாதன் வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: சமுதாய அளவில் பெற்றோர்களுக்கும் தெய்வத்திற்கும் இணையான மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள் ஆசிரியர்கள். மாணவர்களுக்கு கல்வியும் ஒழுக்கத்தையும் போதித்து நல்ல சமுதாயத்தை உருவாக்க அர்ப்பணிப்போடு கடமையாற்றும் ஆசிரியர்கள் உயர் நிலையில் வைத்து போற்றப்படுகிறார்கள். அத்தகைய ஆசிரியர்களின் கடமை உணர்வையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி போற்றும் நாளாக இந்த ஆசிரியர் தினம் அமைகிறது. சிந்தனை வளமும் செயல் திறமும் மிகுந்த வலிமை மிக்க பாரதத்தை உருவாக்க ஆசிரியர்கள் மாணவர்களை வழிநடத்த வேண்டும், என்று கேட்டுக்கொண்டு ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முதல்வர் ரங்கசாமியை விடுத்துள்ள ஆசிரியர் தின வாழ்த்து: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்திகள் கூறியிருப்பதாவது, ஆசிரியர் தினம் என்பது ஆசிரியர்கள் மீது இந்த சமூகம் வைத்திருக்கும் மரியாதையும் போற்றுகளையும் எடுத்துக் காட்டுவதாகும். இது நமது கலாச்சார மரபுகளில் ஆழமாக வேரூன்றி உள்ள குரு சிஷ்ய உறவின் பிரதிபலிப்பாகும். பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியர்கள் கருதப்படுவதால் ஒவ்வொரு மாணவரின் வாழ்விலும் ஆசிரியர்களின் இடம் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது. மாணவர்களுக்கு ஊக்கம் , அறிவை ஊட்டி, சரியான பாதையை காட்டி அவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமானதாக உருவாக்க கடினமான உழைக்கும் ஆசிரியர்களின் அன்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். ஆற்றல்மிக்க இளைய சமுதாயத்தை உருவாக்கி தருவதில் தங்கள் வாழ்நாளை செலவிடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் இன்னாளில் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.