நாட்டை உலுக்கிய பத்லாபூர் வன்கொடுமை: குற்றவாளி என்கவுன்டரில் கொல்லப்பட்டது எப்படி?

மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தின் பத்லாபூா் நகரில் உள்ள ஒரு மழலையா் பள்ளியில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி, காவல்துறையின் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, காவல்துறையினரிடமிருந்து கைத்துப்பாக்கியை பறித்து, காவல்துறை ஆய்வாளர் நிலேஷ் மோர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், தற்காப்புக்காக, காவல்துறையினர் திருப்பிச் சுட்டதில், குற்றவாளி அக்சய் ஷிண்டே சம்பவ இடத்திலேயே பலியானதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில், நிலேஷ் மோருக்கு தொடை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாககக் கூறப்படுகிறது

Related posts

Leave a Comment