நேரலையில் இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதல்.. பேசிக் கொண்டிருந்த போதே தூக்கி வீசப்பட்ட செய்தியாளர்..

லெபனான் நாட்டு ஊடகவியலாளர் ஒருவர் தொலைக்காட்சி நேரலையில் நேர்காணல் நடத்திக் கொண்டிருந்தபோது இஸ்ரேலிய ஏவுகணை ஒன்று அவரது வீட்டைத் தாக்கியதில் அவர் காயமடைந்தார். மிராயா இன்டர்நேஷனல் நெட்வொர்க்கின் தலைமை ஆசிரியர் ஃபாடி பௌதயா, ஏவுகணை அவரது வீட்டைத் தாக்கிய நேரம், சமநிலையை இழந்த ஊடகவியலாளர் தூக்கி வீசப்பட்டார்.

நேரலையில், அரங்கேறிய இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வீடியோவின் படி, நேரலையில் பௌதயா பேசிக் கொண்டிருந்த போது அவரது வீட்டை ஏவுகணை ஒன்று தாக்கியது. திடீர் தாக்குதலை அடுத்து அலறிய பௌதயா வீடியோவை துண்டித்ததாக தெரிகிறது.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் அவருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது. நேரலையில், இருக்கும் போது தாக்குதலில் சிக்கிய செய்தியாளருக்கு என்ன ஆனது என எக்ஸ் தளத்தில் பலரும் கேள்விகள் மற்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். தாக்குதலுக்கு பின் சிறிது நேரம் கழித்து ஆன்லைன் வந்த பௌதயா ஃபாளோயர்களுக்கு பதில் அளித்தார்.

அதில், “தொலைபேசியில் அழைத்தவர்கள், குறுஞ்செய்தி அனுப்பியவர்கள், செக்-இன் செய்தவர்கள் மற்றும் ஏதோ உணர்ச்சியை உணர்ந்த அனைவருக்கும் நன்றி. கடவுளுக்கு நன்றி, நான் நலமாக இருக்கிறேன், கடவுள் மற்றும் அவர் எங்களுக்கு அளித்த ஆசீர்வாதங்களுக்கு நன்றி. எதிர்ப்புக்கு ஆதரவாக எங்கள் ஊடக கடமையைத் தொடர நாங்கள் திரும்புகிறோம், அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி,” ” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment