முதல்வர் ஸ்டாலின் – சோனியா காந்தி சந்திப்பு!

தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27.9.2024) புதுதில்லியில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு, இன்று மாலை 5.35 மணிக்கு தில்லியில் இருந்து புறப்படும் முதல்வர், இரவு 8.20 மணிக்கு சென்னை வந்தடைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment