தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதியநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, 6 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, வனத்துறை அமைச்சகராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மதிவேந்தன்- ஆதிதிராவிடர் நலத்துறை, ராஜகண்ணப்பன்- காதி மற்றும் பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசுக்கு-நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆகிறார். அவருக்கான இலாக்கா பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியுடன், கோவி.செழியன், ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர் ஆகியோரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா நாளை மாலை 3.30 மணிக்கு நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
அமைச்சரவை மாற்றம் தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.