வில்லியனூர் தொகுதியில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி: எதிர்க்கட்சித் தலைவர் . சிவா துவக்கி வைத்தார்

புதுச்சேரி வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட வசந்தம் நகர், ஆத்துவாய்க்கால்பேட், குளத்துமேடு மற்றும் வி.மணவெளி வழியாக செல்லும் வாய்க்கால்களை பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம் மூலம் ரூ. 7 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் இன்று துவங்கியது.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா அவர்கள் கலந்துகொண்டு தூர்வாரும் பணிகளை பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில், பொதுப்பணித்துறை நீர்பாசனக் கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் சங்கர் மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், தொகுதி அவைத் தலைவர் ஜலால் அணிப், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், தொழிலாளர் முன்னேற்ற பேரவை சங்கத் தலைவர் அங்காளன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் தேசிகன், ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் கதிரவன், தொகுதி துணை செயலாளர் அரிகிருஷ்ணன், தொகுதி செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், சபாபதி, கலியபெருமாள், ஹரி, மிலிட்டரி முருகன், முருகேசன், கந்தன், தங்கராசு, சிலம்பு, வீரகண்ணு, நடராஜன், ராஜேந்திரன், வாசு, ஜீவா, வேலு, காசிநாதன், முருகன், ஆறுமுகம், கந்தசாமி, ராஜேஷ், கார்த்திகேயன், பாலமுருகன், முத்து, புவனேஷ், பாலு, ரகு, மனோன், சிவசங்கரன், திருநாவுக்கரசு, வீரமுத்து, பிரபாகரன், பிரவீன், கோபி, பவித்ரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related posts

Leave a Comment