இந்தியா முழுவதும்‌ 42 வழக்குகளில்‌ தொடர்புடைய2 அரியானா இளைஞர்கள் கைதுபுதுச்சோரி சைபர்‌ கிரைம்‌ போலீசார் நடவடிக்கை

புதுச்சேரி, ஜூலை.18- அரியானா கேலஎச்‌ வெகேஷன்‌ கிளப்‌ என்ற நிறுவனம்‌ கடந்த ஆண்டு ரூ.85,000 பிரீயம்
செலுத்தினால்‌ ஓர்‌ ஆண்டு பிரீமியம்‌ அடிப்படையில்‌, இந்தியாவில்‌ இருக்கிற சுற்றுலா தலங்களில்‌ எங்கு வேண்டுமானாலும்‌ குறைந்த பட்சம்‌ ஐந்து நாட்கள்‌ இலவசமாக தங்க உணவு, போக்குவரத்து வசதிகளை
அடங்கும்‌ டூரிஸ்ட்‌ பேக்கேஜ்‌ செய்து தருவதாக
ஆன்லைனில்‌ விளம்பரம்‌ செய்தது.
இதனை பார்த்து புதுச்சேரியைச்‌ சேர்ந்த ராகுல்‌ கிருஷ்ணா என்பவர்‌ தொடர்பு கொண்டார்‌. அப்போது மிக குறைந்த விலையில்‌ ஆண்டுக்கு பத்து நாட்கள்‌
குறிப்பிட்ட மலைவாழ்‌ தளங்களில்‌ சென்று
தங்கி சாப்பிட அனைத்து ஏற்பாடுகளையும்‌ அமைத்து
தருகிறோம்‌ என்று கூறினர்‌. அதை நம்பி ஒரு ரூ.1 லட்சத்து 63 ஆயிரம்‌ ‌ பணத்தை இணைய வழியில்‌ ராகுல்‌ கிருஷ்ணா செலுத்தினார்‌.
அப்படி பணத்தை செலுத்தி எட்டு மாத
காலமாகியும்‌, அவருக்கு எந்த ஒரு இடத்திற்கும்‌ சென்று தங்குவதற்கு அவர்கள்‌ பேக்கேஜ்‌ அனுப்பவில்லை அதனால்‌ அவர்‌ ஏமாற்றப்பட்டதாக சைபர்‌ கிரைமில்‌ புகார்‌ கொடுத்தார்‌. இப்புகார்‌ சம்பந்தமாக புதுச்சேரி இணையவழி போலீசார்‌ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்‌. அப்போது மேற்படி நபர்கள்‌ மீது இந்தியா முழுவதும்‌ பல்வேறு வழக்கு பதிவாகியிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து சைபர்‌ கிரைம்‌ சீனியர்‌ எஸ்‌.பி.
கலைவாணன்‌ உத்தரவின்‌ பேரில்‌, எஸ்‌.பி. பாஸ்கரன்‌
அறிவுரைத்தலின்படி இன்ஸ்பெக்டர்கள்‌ தியாகராஜன்‌
மற்றும்‌ கீர்த்தி ஆகியோரின்‌ தலைமையில்‌ சிறப்பு படை போலீசார்‌ தலைமை காவலர்‌ மணிமொழி மற்றும்‌ காவலர்‌ அரவிந்தன்‌, துளசிநாதன்‌ ஆகியோர்கள்‌
நேற்று முன்தினம்‌ இரவு அவர்களுடைய வங்கி
கணக்குகளை முடக்கினர்‌. மேலும்‌ அரியானா மாநிலத்தைச்‌ சேர்ந்த அஜய்‌ மேளா மற்றும்‌ ஓசாமா கான்‌ ஆகிய இருவரையும்‌ நேற்று அதிகாலை கொடைக்கானலில்‌ கைது செய்து, புதுச்சேரி சைபர்‌ கிரைம்‌ காவல்‌ நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்‌.
பின்னர்‌ இருவரையும்‌ கைது செய்து, அவர்களை
நீதிமன்றத்தில்‌ ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்பேரில்‌ சிறையில்‌ அடைத்தனர்‌. மேற்படி இருவர்‌ மீதும்‌ நாடு முழுதும்‌ பல்வேறு இடங்களில்‌ புகார்‌ பதிவு செய்யப்பட்டு இருப்பதும்‌, கொடைக்கானல்‌, கர்நாடகா, கேரளா, குஜராத்‌ ஆகிய மாநிலங்களில்‌ அவர்களை கைது செய்து இருப்பதும்‌ விசாரணையில்‌ தெரிய வந்தது.

Related posts

Leave a Comment