உத்தர பிரதேச மாநிலம் சர்க்காரி தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருப்பவர் பிரிஜ்பூஷண் ராஜ்புட். இவர் தனது காரில் பயணம் மேற்கொண்டபோது, மஹோபா என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வாகனத்தை நிறுத்தி எரிபொருள் நிரப்பினார்.
அப்போது பெட்டோல் நிரப்பும் ஊழியர் எம்.எல்.ஏ.-விடம் தனக்கு பெண் பார்க்க உதவும்படி கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக இருவரிடையே நடைபெற்ற உரையாடல் வைரலாகி வருகிறது.
சர்க்காரி என்ற இடத்தில் வசித்து வரும் பெட்ரோல் நிரப்பும் ஊழியரான அகிலேந்திர கரே, எம்.எல்.ஏ.விடம் “தனக்கு பெண் பார்க்க உதவுங்கள்” எனக் கேட்கிறார்.
அதற்கு எம்.எல்.ஏ. பிரஜ்பூஷண் ராஜ்புட் “உங்களுக்கு என்ன வயது ஆகிறது” எனக் கேட்க, அந்த ஊழியர் “44 வயது ஆகிறது” எனக் கேட்கிறார்.
“உங்களுக்கு பெண் தேடுவதற்காக என்னை தேர்ந்தெடுத்தது ஏன்?” என எம்.எல்.ஏ. கேட்க, அந்த ஊழியர், “நான் உங்களுக்கு வாக்களித்துள்ளேன்” எனக் கூறுகிறார்.
அதற்கு எம்.எல்.ஏ. “வேறு யாரிடம் பெண் பார்க்க சொன்னீர்களா? நாங்கள் உங்களுக்காக பிரார்த்திக்கிறேன். பெண் தேட முயற்சிக்கிறேன். ஏனென்றால் நீங்கள் எனக்கு வாக்களித்துள்ளீர்கள்” எனக் கூறுகிறார்.
உங்களுடைய வருமானம் எவ்வளவு, ஒருவேளை பெண் வீட்டார் கேட்டால் கூற வேண்டும் எனக் கேட்க, அந்த ஊழியர், “6 ஆயிரம் ரூபாய். 13 பிகாஸ் நிலம் உள்ளது” என்கிறர். அதற்கு எம்.எல்.ஏ. நிலம் கோடிக்கணக்கில் மதிப்பு மிக்கது. உங்களுக்கு உதவி செய்வேன்” எனக் கூறுவது போல் உரையாடல் முடிவடைகிறது.