நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு வருகிற 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் நடைபெற உள்ளது.
இந்த மாநாடு வெற்றி பெற வேண்டி புதுவை யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்ட விஜய் ரசிகர்கள் திருநள்ளாறில் உள்ள புகழ் பெற்ற சனீஸ்வரர் கோவில் வழிபாடு நடத்தினர்.
சனிபகவானின் காலடியில் மாநாட்டு பத்திரிகையை வைத்து விஜய் பெயருக்கு அர்ச்சனை செய்து மாநாடு வெற்றி பெற வேண்டினர்.