மணவெளி சட்டமன்ற தொகுதி சின்ன வீராம்பட்டினம் பகுதியில் நடைபெற்ற இலவச பொது மருத்துவம் பல் மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாமினை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான செல்வம் தொடங்கி வைத்தார்.
இந்த மாபெரும் மருத்துவ முகாமில் பிவேல் மருத்துவமனை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் Smile and Glow ஆசிய மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கிராம பஞ்சாயத்தார் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்