கோலமிட்ட பெண்கள் மீது கார் மோதி விபத்து

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் 17 வயது சிறுவன் ஓட்டிவந்த கார் ரங்கோலி கோலம் போட்டி கொண்டிருந்த 2 பெண்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவ்யா (13) என்ற சிறுமியும் பிரியன்ஷி (21) என்ற இளம்பெண்ணும் தீபாவளியை ஒட்டி தங்களது வீட்டிற்கு வெளியே ரங்கோலி கோலம் போட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கார் இவர்கள் மீது அதிவேகமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் காயமைடந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நவ்யா (13) கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

காரை ஓட்டி வந்த 17 வயது சிறுவன் விபத்து ஏற்படுத்தியவுடன் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த மக்கள், காரை அடித்து நொறுக்கி, ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

மேலும் காருக்குள் மதுபாட்டில்கள் இருந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினார். இதனையடுத்து விபத்து ஏற்படுத்திய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

Related posts

Leave a Comment