புதுவை வீராம்பட்டிணத்தில் ரூ. 46.16 கோடியில் புதிய மீன்பிடித் துறைமுகம் கட்டுமான பணி-முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

புதுச்சேரி.நவ.4- புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை மூலம் அரியாங்குப்பம், அடுத்த வீராம்பட்டினம் மீனவர் கிராமத்தில் தேங்காய்திட்டு அருகே அரிக்கன்மேடு சுற்றுலா தளத்தை ஒட்டியுள்ள மீன்பிடி துறைமுக கட்டுமானம் மற்றும் விரிவாக்க பணிகளுக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இதற்காக மத்திய அரசின் நிதி வழங்கும் திட்டமான பிராதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை முலம் ரூபாய்.53 கோடியே 38 லட்சம் அனுமதி பெறப்பட்டது. அதில் ரூ.46 கோடியே 16 லட்சம் செலவில் கட்டிட பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் என்ற தட்சிணாமுர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை செயலர் நெடுஞ்செழியன், பொதுப்பணித்துறை செயலர் ஜெய்ந்தகுமார், தலைமைப் பொறியாளர் தீனதயாளன் மற்றும் துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர், நிகழ்ச்சியை தொடர்ந்து ரங்கசாமி செய்தியாளர்களுடம் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் அரிசி பல இடங்களில் வழங்கப்படவில்லை என்ற கேள்விக்கு அரிசிக்கு பதில் பணம் செலுத்தும்போது உடனடியாக செலுத்தப்பட்டது, ஆனால் அரிசி கொள்முதல் என்பது ஒரே நேரத்தில் முடிந்துவிடாது, எனவே அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி விரைவில் வழங்கப்படும், ரூ.49 கோடி ரூபாயில் கட்டப்படும் இந்த மீன்பிடி துறைமுகம் அனைத்து நவீ்ன வசிதிகளும் மிக விரைவில் கட்டி முடிக்கப்படும் என தெரிவித்தார்.

Related posts

Leave a Comment