பாவேந்தர் பாரதிதாசனார் மகனார்தமிழறிஞர் மன்னர்மன்னன் பிறந்த நாள் விழா !

பாரதிதாசன் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் “பாவேந்தர் கலை, இலக்கிய திங்கள் விழா”பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வருகிறது.
பாரதிதாசன் மைந்தரும் முதுபெரும் தமிழறிஞருமான மன்னர் மன்னன் 97 ஆவது பிறந்த நாளை முன்னிட்டுப்
“புரட்சிக்கவிஞர் போற்றிய மைந்தர் மன்னர்மன்னன்!” என்ற தலைப்பிலான 72 ஆவது மாத விழாவுக்கு
அறக்கட்டளைத் தலைவர் தமிழறிஞர் கோ. பாரதி தலைமை தாங்கிப் பேசினார்.
அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த தமிறிஞர் மன்னர்மன்னன் திருவுருவப் படத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர், வி.பி. சிவக்கொழுந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் ரெவே சொசியால் சங்கத் தலைவர் துபாய் குழந்தை, திண்டிவனம் தாகூர் கல்விச் சங்க நிர்வாகிகள் ரவீந்திரநாத், தேவேந்திரநாத், கொஜிரியோ கராத்தே சங்கத் தலைவர் சுந்தர்ராஜன், காந்திநகர் நல வாழ்வுச் சங்கத்தினர், கலை பண்பாட்டு துறை இயக்குநர் வி. கலியபெருமாள் கலை முதியோர் இல்லம் கலைவாணி கணேசன், அறக்கட்டளைச் செயலர், ஜெ.வள்ளி, இசைச்சுடர் வி. கிருஷ்ணகுமார், மூத்ததமிழ் அறிஞர்கள் சு.வேல்முருகன், தூ.சடகோபன்,என்.ஆர் இலக்கியப் பேரவைத் தலைவர் jனசேகரன் , சீனு.வேணுகோபால்,கலக்கல் காங்கேயன், தமிழ்நெஞ்சன்,தேவி.திருவளவன்,இராதே,தி.கோவிந்தராசு,சீனு.மோகன்தாசு, அருள்செல்வம் ,வைத்தி கஸ்தூரி, கலைசு்சுடர் பாரதி, கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பல்வேறு அமைப்பின் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மலர் வணக்கம் செலுத்தினர். பூரணாங்குப்பம் ஆனந்தன் சரவணன் உள்ளிட்டோர் பனைமரப் பாதுகாப்பாளர்கள் மரக்கன்றுகளை அன்பளிப்பாக வழங்கினர்.
விழாவில் “மறுமலர்ச்சிக்கவிஞர் மன்னர்மன்னனும் செவாலியே இராச. வெங்கடேசனும்” என்ற தலைப்பில் முனைவர் பூங்குழலி பெருமாள் உரையாற்றினார்.

பள்ளி, கல்லூரியை சேர்ந்த மாணவர்களுடன் 50 கவிஞர்கள் மன்னர் மன்னன் பிறந்த நாளை முன்னிட்டுப் பாவேந்தர் பாரதிதாசன் கவிதை வரியைத் தலைப்பாகக் கொண்டு நடைபெற்ற “உண்டாகி இருக்கின்ற தமிழ் உணர்ச்சி..” என்ற கவியரங்கத்தில் கவிதை வாசித்தனர்.படைப்பாளி பைரவி,ம.மதன், ஏகாம்பரம் ஒருங்கிணைப்புப் பணியாற்றினர்.
நிறைவில் பாவலர் மு.தேன்மொழி நன்றி தெரிவித்தார்.

Related posts

Leave a Comment