அங்காளன்‌ எர்‌.எல்‌.ஏ.வுக்கு புதிய கார்‌ ஆளுநர்‌ அதிரடி உத்தரவு

புதுவையில்‌ என்‌.ஆர்‌.காங்‌கிரஸ்‌, பா.ஜ.க. கூட்டணிஅரசு பொறுப்பேற்றவுடன்‌ அமைச்சர்கள்‌, எம்‌.எல்‌.ஏ.க்‌களுக்கு கார்‌ வழங்கப்பட்டது.
திருபுவனை தொகுதிபா.ஜ.க. ஆதரவு சுயேட்சைஎம்‌.எல்‌.ஏ. அங்காளனுக்கு புதிய கார்‌ வழங்கவில்லை.
அவருக்கு பழைய கார்‌ வழங்‌கப்பட்டது.இந்த கார்‌ அடிக்கடி பழுதானதால்‌ இதைதிரும்ப ஒப்படைத்துவிட்டுசட்டசபைக்கு பைக்கில்‌
வந்து பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தினார்‌. அரசு புதிய கார்‌ வழங்க வேண்டும்‌ எனவும்‌அவர்‌ கோரிக்கை வைத்தார்‌.இருப்பினும்‌ அவருக்கு புது கார்‌ வழங்கவில்லை.இந்நிலையில்‌ புதுவை ஆளுநர்‌ராதாகிருஷ்ணனை கடந்த 20-ஆம் ‌தேதி மரியாதை நிமித்தமாக அங்காளன்‌ எம்‌.எல்‌.ஏ.சந்தித்தபோது, தனக்கு கார்‌வழங்கப்படாதது குறித்துவருத்தம்‌ தெரிவித்தார்‌. இதையடுத்து முதலமைச்சர்‌ அலுவலகத்தைதொடர்பு கொண்ட கஆளுநர்,
உடனடியாக கார்‌ வழங்கஉத்தரவிட்டார்‌. இதனால்‌ அமைச்சராக பொறுப்பேற்று இலாகா இல்லாமல்‌ உள்ள திருமுருகனுக்கு வழங்கப்படஇருந்த டொயோட்டா கிரிஸ்டா கார்‌ அங்காளன்‌ எம்‌.எல்‌.ஏ.வுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment