ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் இறுதிக்கட்டமாக மீதமுள்ள 38 தொகுதிகளில் இன்று(நவ. 20) வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 12 மாவட்டங்களிலுள்ள 14,218 வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. முன்னதாக, முதல்கட்டமாக வாக்குப்பதிவுகடந்த 13-ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கண்ட இடங்களில் 67.59 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முதல்கட்ட தகவலின்படி தெரிய வந்துள்ளது.
வரும் சனிக்கிழமை(நவ. 23) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அன்றைய நாளில், ஜார்க்கண்ட்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ‘ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ஆர்ஜேடி’ இணைந்துள்ள இந்தியா கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா அல்லது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றுமா என்பதற்கான விடை தெரிந்துவிடும்.