புதுவை பெத்துசெட்டிப்பேட்டை சித்தி விநாயகர்,சிவசுப்பிரமணியர் கோயிலில் தங்க தேர் செய்யும்பணி தொடக்க விழா
இன்று காலை நடந்தது.விழாவில் சிறப்புஅழைப்பாளராக ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்துகொண்டார். அவருக்குகோயில் நிர்வாக அதிகாரி
பிரபாகரன் தலைமையில்பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்துகோயிலில் கவர்னர் சாமிதரிசனம் செய்தார்.
அதன் பிறகு தங்கதேர் செய்யும் பணியைகவர்னர் கைலாஷ்தாதன்பூஜை செய்து பணியைதொடங்கிவைத்தார். இந்ததங்க தேர் 12 1/2 அடி உயரத்
தில் தேக்கு மரத்தில் செப்பட்டு செப்புத்தகடு பதித்து, அதல் 600 பவுன் தங்க முலாம் பூசப் பட உள்ளது. இதன் மதிப்பு 4 கோடியாகும்.நிகழ்ச்சியில் வைத்
தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் சபாநாயகர்சிவகொழுதந்து, திருப்பணிக்குழு தலைவர் மணி,உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, தண்டபாணி, மணி,
மோகன்ராஜ், முருகவேல்,அண்ணாதுரை, மதியழகன், முருகவேல், செல்வகணபது, ராமநாதசுவாமி, உட்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.