புதுச்சேரி அரசின் மகளிர் மட்டும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் வில்லியனூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 161 பயனாளிகளுக்கு முதியோர், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோருக்கான உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று காலை நடந்தது.
இந்நிகழ்ச்சியில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் பயனாளிகளுக்கு உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டையை வழங்கினார்.
இதில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை துணை இயக்குனர் அமுதா, நல ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், அவைத் தலைவர் ஜலால் அணிப், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு. மோகன்தாசு, வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் செல்வநாதன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், விவசாய அணி துணை அமைப்பாளர் கோபி, ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் காளி, இலக்கிய அணி துணை அமைப்பாளர் கலிமுல்லா, தொமுச தலைவர் அங்காளன், ஆதிதிராவிட அணி துணை தலைவர் கதிரவன், தொகுதி துணை செயலாளர்கள் ஜெகன்மோகன், ஹரி கிருஷ்ணன், பொருளாளர் கந்தசாமி, தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி, ஏழுமலை, தங்கராசு, மிலிடரி முருகன், சேகர், வெங்கடேசன், கமால்பாஷா, வாசு, கார்த்திகேயன், சுரேஷ், சிராஜி, கோவிந்தராஜ், ரகு, முருகன், நடராஜன், அன்புநிதி, ஜீவா, அன்பு, மனோ, லட்சுமணன், ராமஜெயம், வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதியோர் உதவித் தொகைக்கான அடையாள அட்டைஎதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்
