அரியாங்குப்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வீராம்பட்டினம் பிரசித்தி பெற்ற ஸ்ரீ. செங்கழுநீர் அம்மன் தேவஸ்தானத்திற்கு சொந்தமான சுமார் 11.5 ஏக்கர் நிலம் முதலியார் பேட்டை வேல்டராம்பட்டில் 40 ஆண்டுகள் தனியார் குத்துகைதாரர் ஆக்கிரமித்து வைத்திருந்தார். இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை மூலம் நீதிமன்றம் மூலம் வழக்கு தொடரப்பட்டு குமார் 40 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வருகிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்கை அரியாங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர்(எ)தட்சிணாமூர்த்தியின் பெரும் முயற்சியால் வீராம்பட்டினம் திருப்பணிக்குழு மக்கள் குழு ஆகியோரின் ஆதரவுடன் சுமார் 100 கோடி பொறுமான நிலம் மீட்டக்கப்ட்டது.
புதுச்சேரி வருவாய்த்துறை வட்டாட்சியர் பிரித்திவிராஜ், சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர்(எ)தட்சிணாமூர்த்தி கோவில் தனி அதிகாரி சுரேஷ், வீராம்பட்டினம் மக்கள் குழு, திருப்பணிக்குழு ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நிலம் மீட்கப்பட்டு வட்டாட்சியர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது இதில் முதலியார் பேட்டை காவல்துறை ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர்(எ) தட்சிணாமூர்த்தி. வழக்கறிஞர்கள். மற்றும் சட்ட வல்லுநர்களுடன் தொடர்ந்து முயற்சி செய்து நிலத்தை மீட்டெடுத்ததற்கு அரியாங்குப்பம் தொகுதி மக்கள் சார்பாகவும் வீராம்பட்டினம் பொதுமக்களும் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.