புதுவை மணவெளி தொகுதி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 கோடியே 56 லட்சத்திற்கு கடன் உதவி சட்டப்பேரவை தலைவர் செல்வம் வழங்கினார்

மணவெளி தொகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 கோடியே 56 லட்சத்திற்கு கடன் உதவிக்கான காசோலைகளை சட்டப்பேரவை தலைவர் செல்வம் வழங்கினார்.

புதுச்சேரி மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மணவெளி தொகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி கடன், நலிவுற்றோர் நிதி கடன், பிரதான் மந்திரி உணவு பதப்படுத்துவோர் சிறப்பு கடன், வங்கி இணைப்பு கடன் மற்றும் துவக்க நிதி என ரூ‌. 1 கோடியே 56 லட்சம் கடனுதவிக்கான காசோலைகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான செல்வம் 205 பயனாளர்களுக்கு தவளகுப்பத்தில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன் இணை வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியன் செயல் அதிகாரி கார்த்திகேயன் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் பாஜக மாநில விவசாய அணி தலைவர் ராமு மாவட்ட தலைவர் சுகுமாரன் கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் மாவட்ட துணைத் தலைவர் மணிகண்டன், ராஜதுரை, வாழுமுனி, செந்தில்குமார், சிவா, சுமதி, மணி, சரவணன் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment