புத்தக கண்காட்சியில் புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டெல்லி முதலான நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 70 புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அரங்குகள் அமைக்கின்றனர். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன.
கண்காட்சியில் 15 புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன. புதுச்சேரி எழுத்தாளர்களின் நூல்களுக்குத் தனி அரங்கம் ஏற்பாடு செய்யப்படுகிறது. கண்காட்சியில் இடம்பெறும் நூல்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் 1000 ரூபாய்க்கு புத்தகம் வாங்குவோருக்கு புத்தக நட்சத்திரம் சான்றிதழ்களும், ஆயிரம் மடங்கில் நட்சத்திர சான்றிதழ்களும் வழங்கப்படும்.10 ஆயிரத்திற்கு மேல் புத்தகம் வாங்குவோர்களுக்கு புத்தக சிறந்த நட்சத்திரம் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது. அனுமதி இலவசம். ஏற்பாடுகளை புத்தக கண்காட்சி குழு செய்து வருகின்றது.
புதுச்சேரி எழுத்தாளர்கள் புத்தகச் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 28-வது தேசிய புத்தகக் கண்காட்சி வேல்சொக்கநாதன் திருமண நிலையத்தில் டிசம்பர் மாதம் 13ஆம் தேதி துவங்கி 22ஆம் தேதி வரை நடக்கின்றது.