புதுச்சேரி அரசின் 2025ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு

புதுச்சேரியில் 2025ம் ஆண்டிற்கான அரசின் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் 17 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஆணைப்படி, புதுச்சேரி அரசு விடுமுறை நாள்கள் கவர்னர் ஒப்புதலின் பேரில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு, ஜனவரி 14ம் தேதி பொங்கல் திருநாள், ஜனவரி 15ம் தேதி திருவள்ளுவா் தினம், மார்ச் 31ம் தேதி ரம்ஜான், ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு, 18ம் தேதி ஏப்ரல் புனித வெள்ளி, மே 1ம் தேதி மே தினம்,

ஜூன் 7ம் தேதி பக்ரித் பண்டிகை, ஆகஸ்ட்1௫ம் தேதி சுதந்திர தினம், ஆகஸ்ட் 16ம் தேதி டிஜுரே டிரான்ஸ்பர் தினம், ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி, செப்டம்பர் மாதம் 5ம் தேதி மிலாடி நபி, அக்டோபர் 1ம் தேதி சரஸ்வதி பூஜை, அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி, நவம்பர் 1ம் தேதி புதுச்சேரி விடுதலை நாள், டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை என்று 17 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

==================================

Related posts

Leave a Comment