முன்னாள் முதல்வர் உடல் எரியூட்டப்பட்டது
முதல்வர் அமைச்சர்கள் திமுக காங்க காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி
புதுச்சேரி டிசம்பர் 10 புதுச்சேரியில் மறைந்த முன்னாள் முதல்வர் ராமச்சந்திரனின் உடல் 21 குண்டுகள் வழங்க முழு அரசு மரியாதை உடன் நேற்று தகரம் செய்யப்பட்டது
புதுச்சேரி முன்னாள் முதல்வர் எம் டி ஆர் ராமச்சந்திரன் 93 வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நல குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காலமானார் திமுக அதிமுக காங்கிரஸ் கட்சிகளில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த அவர் தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவராக இருந்து வந்தார் அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் புதுச்சேரி ஆளுநர் கைலாஷ் நாதன் முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் திமுக காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர் மேலும் புதுச்சேரி அரசு சார்பில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மறைந்த எம். டி. ஆர். ராமச்சந்திரன் உடன் நெட்டப்பாக்கம் தொகுதி மடுகரை கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று வைக்கப்பட்டது. அங்கு முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார், திருமுருகன், அரசு கொறடா ஏ கே டி ஆறுமுகம் கே எஸ் பி ரமேஷ், பாஸ்கர் (எ) தக்ஷிணாமூர்த்தி, லஷ்மி காந்தன், நேரு, அசோக் பாபு, ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர். திமுக சார்பில் துணை பொதுச்செயலாளரும் வனத்துறை அமைச்சர்ருமான பொன்முடி புதுவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், அனிபால் கென்னடி செந்தில்குமார், சம்பத், நாகராஜன் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொன் கௌசிகாமணி புதுச்சேரி அவைத்தலைவர் எஸ் பி சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர் .
காங்கிரஸ் சார்பில் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்பி முன்னால் முதல்வர் நாராயணசாமி முன்னாள் தலைவர் ஏ பி சுப்பிரமணியன் வைத்தியநாதன் எம் எல் ஏ முன்னாள் அமைச்சர் கந்தசாமி காமராஜர் தொகுதி பொது பொறுப்பாளரும் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆன தேவதாஸ் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முன்னாள் எம்எல்ஏக்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர் மாலை 5 மணி அளவில் முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் உடல் ஊர்வலமாக செல்லப்பட்டு மடுகரை சுடுகாட்டில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது