துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம் 2024 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தனது பதக்கப் பட்டியலைத் திறந்துள்ளது.
கடந்தமுறை நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை மனு பாக்கர் இழந்திருந்த நிலையில், இம்முறை பதக்கம் வென்றுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கின் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பெண்கள் பிரிவில் (பிஸ்டல்) 221.7 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.
தென்கொரியாவின் ஓ யே ஜின் என்பவர் 243.2 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். மற்றொரு கொரிய வீராங்கனை கீ யேஜின் 241.3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மனு பாக்கர் பதக்கம் வென்றதன் மூலம் துப்பாக்கி சுடுதலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.