அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா காலமானார்

தேசிய லோக் தள தலைவரும் அரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 89.குருகிராமில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அரியானா மாநிலத்தின் முதல்வராக 1989-ம் ஆண்டு முதல் நான்கு முறை பதவி வகித்து ஓம் பிரகாஷ் சௌதாலா சாதனை படைத்துள்ளார். அவர் கடைசியாக மாநில முதல்வராக 1999-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ஓம் பிரகாஷ் சௌதாலா மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

Leave a Comment