தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது தள்ளிவைப்புஜூன் 10 ஆம் தேதி திறக்கப்படும்

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ந்தேதி அரசு பள்ளிகளும், மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறப்பது நியாயமற்றது. அரசின் இந்த முடிவு பள்ளி செல்லும் குழந்தைகளை கடுமையாக பாதிக்கும் என பல தரப்பட்டவர்களும் கருத்து தெரிவித்தனர்.இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
கோடை வெயில் அதிகரித்துள்ளதால் ஜூன் 6-ந்தேதிக்கு பதிலாக ஜூன் 10-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.முன்னதாக, கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ்,ஜி.கே.வாசன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment