மேட்டூர் அணை நீர்மட்டம் 119.80 அடி!

மேட்டூர் அணை நீர்மட்டம் 119.80 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(டிச. 29) காலை வினாடிக்கு 2701 கன அடியிலிருந்து 2516 கன அடியாக சற்று குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 119.72அடியிலிருந்து 119.80அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 93.15 டிஎம்சியாக உள்ளது.

Related posts

Leave a Comment