விபத்தில் சிக்கி மூலச் சாவடைந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில் அதன் மூலம் 7 பேர் பயன் அடைந்துள்ளதாக மருத்துவர் முருகேசன் தெரிவித்தார்
தனது சகோதரி இல்லையென்றாலும் அவருடைய இதயம் எங்கோ ஓரிடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது மனதுக்கு ஆறுதலாக இருப்பதாக உறவினர்கள் கண்ணீர் மல்க பேட்டி

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சேர்ந்தவர் செல்வ கணபதி -சீதா தம்பதியினர், இவர்கள் கடந்த 11-ம் தேதி தனது இரண்டு குழந்தைகளுடன் குறிஞ்சிப்பாடியில் இருந்து கடலூரில் உள்ள கோவிலுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது குறிஞ்சிப்பாடி அடுத்த தம்பி பேட்டை பாலத்தின் அருகே வரும் பொழுது திடீரென ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் செல்வ கணபதி, மற்றும் அவருடைய 3 வயது குழந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தலையில் பலத்த காயம் அடைந்த சீதா மற்றும் ஒன்றை வயது குழந்தையும் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சீதா மூலைச் சாவடைந்த நிலையில் தலையில் காயம் அடைந்த குழந்தை மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மூலச் சாவடைந்த சீதாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன் வந்ததன் நிலையில் மூளைச்சாவடைந்த சீதா புதுச்சேரி மூலக்குளம் ஈஸ்ட் கோஸ்ட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சீதாவிடம் இருந்து எடுக்கப்பட்ட இதயம், கல்லீரல், 2 சிறுநீரகம் இரண்டு கண்கள், என உடல் உறுப்புகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவிலிருந்து நோயாளிகளுக்கு பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி சீதாவின் இதயம் 300 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள ஒருவருக்கும், கல்லீரல் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், அனுப்பி வைக்கப்பட்டது.
அதேபோன்று சிறுநீரகங்கள் புதுச்சேரி மூலக்கூலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கும், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் நோயாளி ஒருவருக்கும் பொருத்தப்பட்டது.
சீதாவிடம் எடுக்கப்பட்ட உடல் உறுப்புகள் ஆம்புலன்ஸில் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து மருத்துவர் முருகேசன் கூறும் போது…
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தனது மருத்துவமனையில் இரண்டாவது முறையாக நடைபெறுகிறது என்றும், உறுப்பு தானங்களை செய்த சீதாவின் குடும்பத்தாருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
சீதாவின் உடலில் இருந்து ஏழு உறுப்புகள் எடுக்கப்பட்டு ஏழு பேர் அதன்மூலம் பயனடைந்து உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
உடல் உறுப்பு தானம் வழங்கியது குறித்து சீதாவின் சகோதரி சங்கரி கூறும்போது…
தனது சகோதரி மூலச் சாவடைந்து இறந்துவிட்டாலும் அவர் அவருடைய இதயமும் கண்களும் மற்ற உறுப்புகளும் யாரோ ஒருவருக்கு பயன் அளிக்கிறது, என்று நினைக்கும் போது ஆறுதலாக உள்ளது, தனது சகோதரி இல்லையென்றாலும் அவளுடைய இதயம் இங்கே ஒரு இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.