புதுச்சேரி அரசு டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மற்றும் மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை இணைந்து நியாய ஒளி திட்டத்தின் கீழ் மணவெளி சட்டமன்றத் தொகுதியில் உள்ள தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு அடிப்படை சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி சட்டப்பேரவை தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் துணை முதல்வர் விஜய் வரவேற்புரை வழங்கினார் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் முதல்வர் சீனிவாசன் நோக்க உரையாற்றினர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக பள்ளி வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சட்டப்பேரவை தலைவர் மரக்கன்றுகள் நட்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் விஜயன் மற்றும் வழக்கறிஞர் முனைவர் திருமதி செம்மலர் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு அடிப்படை சட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினர். தமிழ் ஆசிரியர் பூங்குழலி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் ஆசிரியர் திருமதி சிவரஞ்சனி நன்றி உரை வழங்கினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் தனுசு, என் எஸ் கே இளஞ்செழியன், டாக்டர் ராஜ்குமார், செழியன், தங்கதுரை, முரளி, சசி, சீனு, அருள்ராஜ், தர்மேந்திரன், நரசிம்மன், அய்யனா,ர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்
