மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனுக்கு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில், இந்தியா சார்பில் 1000 மெட்ரிக் டன் அரிசி மற்றும் மருத்துவப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கேமரூன் நாட்டின் வடக்கு மாகாணங்களில் கடந்த 2024-ம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அந்நாட்டு மக்களுக்குத் தேவையான சுமார் 1000 மெட்ரிக் டன் அரசி மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பொருள்களை, கேமரூன் நாட்டுக்கான இந்தியாவின் உயர் ஆணையர் விஜய் கந்துஜா, அந்நாட்டு பிராந்திய நிர்வாக அமைச்சர் பால் அடாங்கா இன்ஞியிடம் ஒப்படைத்தார்.
இதுகுறித்து, விஜய் கந்துஜா வெளியிட்ட முகநூல் பதிவில், அவசரகாலத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான நட்பின் அடிப்படையில், இந்த மனிதாபிமான உதவியானது மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் கேமரூன் நாட்டுக்கு இந்திய அரசு சார்பில் 1000 மெட்ரிக் டன் அளவிலான அரிசி அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.