ECE சான்று பெற்ற ஹெல்மெட் இந்தியாவில் அறிமுகம்

ரைஸ் மோட்டோ அதன் சமீபத்திய ஹெல்டன் ஹெல்மெட் சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஹெல்டன் சீரிஸ் ஹெல்மெட் விலை ரூ.3,499 ஆகும். ஹெல்டன் ISI, DOT மற்றும் ECE தரநிலைகளுக்கு இணங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஹெல்மெட் மூன்று விதமான அளவுகளில் கிடைக்கிறது.

ரைஸ் ஹெல்டன் சீரிஸ் மாடல் மேம்பட்ட பாலிகார்பனேட் மற்றும் ஷெல் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் எடை 1,500 கிராம். இந்த ஹெல்மெட் அதிக வேகத்தில் இழுவையைக் குறைக்கும் ஏரோடைனமிக் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஒருங்கிணைந்த முன்புற வென்ட்கள் ஹெல்மெட்டுக்குள் காற்றைச் செலுத்துகின்றன, அதே நேரத்தில் பின்புற எக்ஸாஸ்ட் வென்ட்கள் வெப்பத்தை வெளியேற்றி, உங்களை குளிர்ச்சியாகவும் கவனம் சிதறாமலும் வைத்திருக்கின்றன.
இதில் இரட்டை டி-ரிங் லாக் வழங்கப்படவில்லை. ஆனால் மைக்ரோமெட்ரிக் சின்ஸ்ட்ராப் சரிசெய்யக்கூடிய தன்மையை உறுதி செய்கிறது. இதில் ஃபேக்டரி ஃபிட் செய்யப்பட்ட, ஆன்டி ஃபாகிங் பின்காக் இல்லை, ஆனாலும் இதன் விசர் 108 டிகிரி கோணக் காட்சியை வழங்குகிறது.

ரைஸ் ஹெல்டன் ஒரு பிரத்யேக ப்ளூடூத் இண்டர்காம் ஸ்பீக்கர் பாக்கெட்டைப் பெறுகிறது. இது தொடர்பு சாதனங்களை தடையின்றி ஒருங்கிணைக்க அனுமதிக்கிறது. லைனர்களை ஹெல்மெட்டிலிருந்து எடுக்கலாம் மற்றும் துவைக்கக் கூடியவை. ஹெல்டன் கிளாஸ் மற்றும் மேட் மோனோடோன் பிளாக் உள்பட ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.

ரைஸ் ஹெல்டன் ஒரு வருட நிறுவன உத்தரவாதத்துடன் வருகிறது. மேலும் இதை நிறுவனத்தின் வலைத்தளம் அல்லது சில்லறை விற்பனைக் கடையில் வாங்கலாம்.

Related posts

Leave a Comment