புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட முருங்கப்பாக்கத்தில் விடுபட்ட பகுதிகளான சேத்திலால் நகர் மற்றும் முருங்கப்பாக்கம் பகுதிகளில் உள்ள சிமெண்ட் சாலைகளை மறுசீரமைப்பு செய்து மேம்படுத்தும் பணிகளுக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில்
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் என்கிற தட்சணாமூர்த்தி பங்கேற்று ரூ.34.35 இலட்சத்திற்கு பணிகளை பூஜை செய்து துவக்கி வைத்தார். .
இந்த திட்டத்தின்மூலம் முருங்கப்பாக்கத்தில் விடுபட்ட பகுதிகளான சேத்திலால் நகர் மற்றும் பழைய முருங்கப்பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 3000 மக்கள் பயனடைவர்.
இந்நிகழ்ச்சியின் போது தலைமைப் பொறியாளர் வீரசெல்வம் , கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி , பொது சுகாதாரக்கோட்ட செயற்பொறியாளர் வாசு, உதவிப்பொறியாளர் சுந்தரி, இளநிலைப் பொறியாளர்கள் தணிகைவேல் மற்றும் செல்வி தேவிபாரதி , ஒப்பந்ததாரர் பரஞ்சோதி , முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.