முதல்வர் ரங்கசாமி பரிந்துரையின்படி புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்த ஆர்த்தியின் பெற்றோரிடம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இறப்புக்கான முதல் தவணையான 40 சதவீதம் நிதியாகிய ரூ. 4லட்சத்து 2 ஆயிரத்து 500 மற்றும் புதுவை அரசின்கூடுதல் நிவாரணமான .4,லட்சம் ஆக மொத்தம்
ரூ.7 லட்சத்து 12 ஆயிரத்து 200 க்கான ஆணையினை முதலமைச்சர் ரங்கசாமி ஏற்கனவே வழங்கினார்
இதனைத்தொடர்ந்து ஆதிதிராவிடர் நலம் மற்றும்பழங்குடியினர் நலத்துறை சார்பில் எதிர்பாராதவிபத்தில் இறக்கும் குடும்பத்தினருக்கு இழப்பீடு
வழங்கும் திட்டத்தின் கீழ் ழ் ரூ.10 இலட்சம் இழப்பீட்டுத் தொகையாக முதலமைச்சர் ரங்கசாமி ஆர்த்தியின் பெற்றோரிடம் நேற்று சட்டப்பேரவையில்
தனது அலுவலகத்தில் வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், பிரகாஷ்குமார், துறைஇயக்குநர் இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.