டென்மார்க்- இங்கிலாந்துக்கிடையான போட்டியூரோ கோப்பை கால்பந்து போட்டி டிராவில் முடிந்தது

ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று நடைபெற்ற போட்டியில் குரூப் ‘சி’ பிரிவில் உள்ள டென்மார்க் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் டென்மார்க் அணி வீரர் மோர்டன் ஹூல்மண்ட் ஒரு கோல் அடித்தார்.

இதனால் ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கடைசி வரை போராடிய இரு அணி வீரர்களால் கூடுதலாக ஒரு கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

ஒரு வெற்றி, ஒரு டிரா என 4 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது.

Related posts

Leave a Comment