அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்து ஜம்மு-காஷ்மீர் ஏடிஜிபி ஆய்வு

அமர்நாத் இந்தியாவில் உள்ள புனித யாத்திரை தலங்களில் ஒன்றாகும். ஜம்மு-காஷ்மீரில் உள்ள 3,900 மீட்டர் உயரமுள்ள அமர்நாத் குகைக் கோவிலுக்கு ஆண்டுதோறும் யாத்ரீகர்கள் பயணம் மேற்கொள்வாரக்ள். 52 நாள் புனித யாத்திரையான இது, வருகிற ஜூன் 29-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19-ம் தேதி நிறைவடைகிறது.

ஜம்மு-காஷ்மீரில் அவ்வப்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்து வருகிறது. பல அப்பாவி மக்களும் உயிரிழந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகளை ஏடிஜிபி ஆனந்த ஜெயின் ஆய்வு செய்தார். அவர் சந்தர்கோட் மற்றும் ரம்பன் ஆகிய இடங்களில் உள்ள லங்கார் தளங்களையும் ஆய்வு செய்தார்.மேலும், அமர்நாத் யாத்திரையை பாதுகாப்பாகவும், சுமூகமாகவும் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க மூத்த காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுடன் ஏடிஜிபி ஆனந்த் ஆலோசனை நடத்தினார்.

Related posts

Leave a Comment