கடந்த ஆண்டில் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.46 ஆயிரம் கோடி வருமானம்

சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக அரசுக்கு மது விற்பனையில் ஆயத்தீர்வை மற்றும் விற்பனை வரி மூலம் கடந்த 2003ம் ஆண்டில் ரூ.3 ஆயிரத்து 639 கோடியே 93 லட்சம் வருவாய் கிடைத்தது. ஆனால் கடந்த 2023-24ம் நிதியாண்டில் ரூ.45 ஆயிரத்து 855 கோடியே 67 லட்சம் வருமானம் கிடைத்து உள்ளது.

கடந்த 2022-23-ம் நிதியாண்டில் ரூ.44 லட்சத்து 121 கோடியே 13 லட்சம் வருவாய் வந்துள்ளது. அதன்படி முந்தைய ஆண்டினைவிட கடந்தாண்டு ரூ.1,734 கோடியே 54 லட்சம் வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment