தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சாமியார் போலே பாபா இதுவரை கைது செய்யப்படவில்லை. தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் குழு அமைத்து அவரை பிடிப்பார்களா? காமராஜர் பிறந்த நாளை வருகிற 15-ந்தேதி கன்னியாகுமரியில் கொண்டாட இருக்கிறோம். அண்ணாமலை நேற்று துக்கம் விசாரிக்க சென்ற இடத்தில் அரசியல் பேசி இருக்கிறார். இது என்ன நாகரிகம்? என்னை சமூக விரோதி, ரவுடி என்றும் கூறி அவதூறாக பேசியுள்ளார். எல்லா அரசியல் கட்சி தலைவர்களையும் பிளாக்மெயில் செய்து வருகிறார். அதிகாரம் எல்லாம் தங்களிடம் இருக்கிறது என்பதற்காக இவ்வாறு அவர் பேசுகிறாரா? ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பா.ஜனதாவை சேர்ந்த ஒருவர் சரண் அடைந்துள்ளார். அவர் என்ன…
Category: Uncategorized
ஆம்ஸ்ட்ராங் வழக்கு… நீதியை நிலைநாட்டுவோம்… மு.க.ஸ்டாலின் உறுதி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவையொட்டி, பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி, துயரில் வாடும் அவரது மனைவி பொற்கொடிக்கும், குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன். கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது.
கம்பம் அரசு மருத்துவமனை கட்டிடம் இடிந்து ஒருவர் பலி- 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
தேனி மாவட்டம் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய சுகாதார இயக்க திட்டத்தின் கீழ் பிரசவ வார்டு மேம்படுத்தும் பணி ரூ.10 கோடியில் நடந்து வருகிறது. இந்த நிதியில் 3 மாடி புதிய கட்டிடம் கட்டுமான பணி கடந்த 2022 ஜனவரியில் தொடங்கியது. ஓராண்டில் பணிகள் முடிக்க வேண்டிய நிலையில் 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவு பெற வில்லை. இந்நிலையில் நேற்று போர்டிகோவின் மேல் பகுதியில் நின்று தொழிலாளர்கள் சிமெண்டு பூச்சு பணியில் ஈடுபட்டனர். அப்போது இருபுறங்களிலும் இருந்த பில்லர்கள் திடீரென இடிந்து விழுந்ததில் மதுரை ஊமச்சிக்குளத்தை சேர்ந்த நம்பிராஜன் (வயது40) என்பவர் உயிரிழந்தார். மேலும் பணியில் இருந்த மதுரையை சேர்ந்த செல்வம் (32), சதீஷ்குமார் (42) ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தேனி அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து…
விக்கிப்பீடியா மீது ஏஎன்ஐ அவதூறு வழக்கு தொடர்ந்தது
விக்கிப்பீடியா இணையதளத்தின் மீது ANI செய்தி நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. விக்கிப்பீடியா இணையதளத்தில் “மத்திய அரசின் பரப்புரை கருவியாக ANI செயல்பட்டு வருவதாகவும், போலிச் செய்திகள் மற்றும் திரிக்கப்பட்ட செய்திகளை நாடு முழுவதும் உள்ள செய்தி நிறுவனங்களுக்கு ANI வழங்குவதாகவும் விமர்சனங்கள் உள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து ANI வழக்கு தொடுத்துள்ளது. விக்கிப்பீடியா இணையதளம் ரூ.2 கோடி நஷ்ட ஈடாக தர வேண்டும் என்று ANI செய்தி நிறுவனம் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நவீன் சாவ்லா, விக்கிப்பீடியாவிற்கு தனது கருத்தை சொல்வதற்கு உரிமை உள்ளது. ஆனால் அது உண்மையா இல்லையா என்பதை சரிபார்க்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த மனு தொடர்பாக பதிலளிக்க விக்கிப்பீடியா இணையதளத்துக்கு நோட்டிஸ் அனுப்பிய நீதிபதி, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை…
ஐரோப்பா நோக்கிச் சென்ற படகு மொரிட்டானியா கடற்கரையில் மூழ்கி விபத்து 89 பேர் பலி
ஐரோப்பா நோக்கிச் சென்ற புலம்பெயர்ந்தோர் படகு மொரிட்டானியா கடற்கரையில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கடலில் மூழ்கி 89 பேர் உயிரிழந்துள்ளனர். படகில் 170 பேர் பயணித்துள்ளனர். படகு கவிழ்ந்ததில் 89 புலம்பெயர்ந்தோரின் உடல்களை கடலோரக் காவல்படையினர் மீட்டுள்ளதாக மொரிடானியாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், ஐந்து வயது சிறுமி உட்பட 9 பேர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் கேனரி தீவுகளை அடைய முயன்றபோது, 5,000 புலம்பெயர்ந்தோர் கடலில் இறந்ததாக இடம்பெயர்வு உரிமைகள் குழுவான வாக்கிங் பார்டர்ஸ் கடந்த ஜூன் மாதம் தெரிவித்துள்ளது.
விக்கிரவாண்டியில் 8-ந்தேதி மாலை 6 மணிக்கு மேல் வெளியாட்கள் வெளியேற உத்தரவு
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி 8-ந் தேதி மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி சில கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும். அதன்படி, தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது. எந்தவொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், எக்ஸ், குறுஞ்செய்தி மற்றும் இணையம் உள்பட அனைத்து மின்னணு வடிவிலான சாதனம் மூலமாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக்கூடாது. பொதுமக்களை ஈர்க்கிற வகையில், இசை நிகழ்ச்சி, திரையிடுதல் மற்றும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்து, அதன் மூலம்…
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபலமான ஐ.டி. சேவை மற்றும் கன்சல்டிங் சேவை நிறுவனம் சென்னையில் சென்னையில் ரூ.1000 கோடியில் நவீன தகவல் தொடர்பு வளாகம்
5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை தற்போது பெங்களூருக்கு இணையாக தகவல் தொழில் நுட்பத் துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஸ்டார்ட்அப் முதல் ஐ.டி. சேவைத் துறை வரையில் தொடர்ந்து முதலீடுகளை பெற்று வருகிறது. இதன் வாயிலாக நாட்டின் மொத்த மென்பொருள் ஏற்றுமதியிலும், மென்பொருள் துறை வேலைவாய்ப்புகளிலும் தமிழ்நாட்டின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபலமான ஐ.டி. சேவை மற்றும் கன்சல்டிங் சேவை நிறுவனமான கேப்ஜெமினி, சென்னையில் புதிய கேம்பஸ் அமைக்க உள்ளதாக நேற்று (செவ்வாய்க் கிழமை) அறிவித்துள்ளது. டெக் நிறுவனங்களின் முதலீடுகள் சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், கேப் ஜெமினி அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.1000 கோடி முதலீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முதலீட்டின் வாயிலாக கேம்ஜெமினி சுமார் 6…
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றம்:11-ஆம் தேதி தேரோட்டம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ மந்நடராஜ மூர்த்தியின் ஆனி திருமஞ்சன தரிசன உற்சவம் இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கி யது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி மாதத்தில் திருமஞ்சனமும், மார்கழி யில் ஆருத்ரா தரிசனமும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஆனி திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில், சாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து இன்று காலை 7.15 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் சிவ.கிருஷ்ணசாமி தீட்சிதர் ரிஷபக் கொடியை ஏற்றி வைத்தார். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். விழாவை முன்னிட்டு நாளை சந்திர பிறை வாகன வீதி உலா, நாளை மறுதினம் தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 6-ந்…
நீட் விலக்கு கோரி தமிழக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்தை வரவேற்கிறேன்- விஜய்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியதாவது: வந்திருக்கும் இளம் சாதனையாளர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும், தவெக தோழர்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா… நண்பிகள் உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் அன்பான பணிவான வணக்கங்கள். இன்று முக்கியமான விஷயம் குறித்து பேசப்போகிறேன்.நீட் தேர்வால் தமிழ்நாட்டில் மாணவ-மாணவிகள், கிராமப்புற ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பை சேர்ந்த மாணவ -மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் சத்தியமான உண்மை.நீட்டை 3 பிரச்சனையாக பார்க்கிறேன்.1. நீட் மாநில உரிமைகளுக்கு எதிராக உள்ளது. 2. ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் ஒரே தேர்வு கல்வி கற்கும் நோக்கத்திற்கு எதிராக பார்க்கிறேன். 3. நீட் தேர்வு முறைகேடால் அதன்மேல் இருந்த நம்பகத்தன்மை போய்விட்டது. நீட் விலக்கு தான் இதற்கு ஒரே…
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக மாணவரணி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தி.மு.க. மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியுள்ளது. நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மேலும், CUET, NET உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி தி.மு.க.வினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பார்ட்டத்தில் தி.மு.க.வினர் ஏராளமானார் பங்கேற்றனர்.
