நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக மாணவரணி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தி.மு.க. மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியுள்ளது. நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மேலும், CUET, NET உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி தி.மு.க.வினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பார்ட்டத்தில் தி.மு.க.வினர் ஏராளமானார் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment