கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்ற 17 வயது மாணவி குழந்தைக்கு காரணமான வாலிபர் கைது

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சீனிவாசபூர் தாலுகா பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவர் வழக்கம்போல் கல்லூரிக்கு வந்தார். அப்போது திடீரென வயிற்று வலியால் அவதிப்பட்ட மாணவி கல்லூரி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. அப்போது மாணவி மயக்கத்தில் இருந்தார். இந்த நிலையில் குழந்தையின் அழுகுரல் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்ததால் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் எங்கிருந்து குழந்தை அழும் சத்தம் வருகிறது என்று தேடினர். அப்போது கழிவறையில் இருந்து குழந்தை சத்தம் கேட்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவி மற்றும் குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கல்லூரிக்கு சென்ற மாணவிக்கு குழந்தை பிறந்த தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்…

அனைவரும் தாயின் பெயரில் மரக்கன்று நட வேண்டும்- மன்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் மன்கி பாத் என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அவர் கடைசியாக பிப்ரவரி 25-ந்தேதி மன் கி பாத்தில் பேசி இருந்தார். அதன்பின் தேர்தல் நடைமுறை அமல்படுத்தப்பட்டதால் உரையாற்றவில்லை. தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று 3-வது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற மோடி இன்று 111-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உங்களை மீண்டும் சந்திப்பேன் என்று பிப்ரவரியில் சொன்னேன், இன்று மீண்டும் மன் கி பாத் நிகழ்ச்சியுடன் உங்கள் மத்தியில் இருக்கிறேன். நமது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாட்டின் ஜனநாயக அமைப்பின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்தியதற்காக நாட்டு மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024 மக்களவைத் தேர்தல் உலகின் மிகப்பெரிய தேர்தல். 65…

குடிப்பழக்கத்தை நிறுத்த மத்தியபிரதேச சமூகநீதி அமைச்சர் நாராயண் சிங் குஷ்வா புதிய யோசனை

மத்தியபிரதேச சமூகநீதி அமைச்சர் நாராயண் சிங் குஷ்வா போபாலில் நடந்த போதை ஒழிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், உங்கள் கணவர்களும் மகன்களும் மது குடிப்பதை நிறுத்த வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால், அவர்களை வெளியே மது அருந்தவிடாமல் வீட்டில் உங்கள் கண்முன்னே மது அருந்த சொல்லுங்கள். அம்மா, மனைவி, பிள்ளைகள் முன்பு அவர்கள் மது அருந்தினால் அவர்களாகவே வெட்கப்பட்டு மது குடிப்பதை படிப்படியாக குறைத்து விடுவார்கள். மேலும், உங்களை பார்த்து நமது பிள்ளைகளும் எதிர்காலத்தில் மது அருந்த ஆரம்பிப்பார்கள் என்று உங்கள் கணவர்களிடம் சொல்லுங்கள். பின்னர் அவர்கள் தானாகவே மது அருந்துவதை நிறுத்தி விடுவார்கள். என்னுடைய இந்த யோசனை நடைமுறை சாத்தியமானது” என்று அவர் தெரிவித்தார்.

முடிவுக்கு வந்தஃபாக்ஸ்கான் சர்ச்சை

திருமணமான பெண்களை பணியமர்த்தவில்லை என்ற குற்றச்சாட்டை ஃபாக்ஸ்கான் இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும் நிறுவனத்தில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களில் 25% பேர் திருமணமான பெண்கள் என்றும் விளக்கம் கொடுத்துள்ளது. ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலையான ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தில் திருமணமான பெண்கள் பணியாற்ற அனுமதிப்பதில்லை என்ற ஊடகச் செய்திகளை கவனத்தில் எடுத்துக்கொண்ட மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், இந்த செய்திகளின் பின்னணியில், விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையிடம் கேட்டிருந்தது. இந்நிலையில், ஃபாக்ஸ்கான் இந்தியா இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசுக்கு விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த விளக்கத்தில், “நிறுவனத்தில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களில் 25% பேர் திருமணமான பெண்கள். மொத்தப் பெண் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் திருமணமானவர்கள் என்பதே இதன் அர்த்தம். அதுமட்டுமில்லாமல், நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 70% பெண்களே. 30%…

குவைத் தீ விபத்து- செஞ்சி, காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் உடல் சொந்த ஊரில் அடக்கம்

குவைத் நாட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிருஷ்ணாபுரம் ஜாபர் பேக் தெருவை சேர்ந்த முகமது ஷெரிப் (வயது 35) மற்றும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் பகுதியை சேர்ந்த சின்னத்துரை உள்பட தமிழகத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். நேற்று காலை குவைத் நாட்டில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்ட முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை உள்ளிட்ட 7 தமிழர்களின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்ட நிலையில், நேற்று பிற்பகல் தனி ஆம்புலன்ஸ் மூலம் முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை உடல்கள் செஞ்சி மற்றும் காட்டுமன்னார்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நள்ளிரவு முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை உடல்கள் அவர்களது இல்லத்திற்கு வந்தது. அப்பொழுது முகமது ஷெரீப் மற்றும் சின்னத்துரை…

பாலியல் வன்கொடுமையால்‌ கொலை செய்யப்பட்ட ஆர்த்தியின்‌ பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி ‌

முதல்வர்‌ ரங்கசாமி பரிந்துரையின்படி புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியில்‌ பாலியல் வன்கொடுமையால்‌ பாதிக்கப்பட்டு இறந்த ஆர்த்தியின்‌ பெற்றோரிடம்‌, ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்‌ கீழ்‌ இறப்புக்கான முதல்‌ தவணையான 40 சதவீதம் நிதியாகிய ரூ. 4லட்சத்து 2 ஆயிரத்து 500 மற்றும்‌ புதுவை அரசின்‌கூடுதல்‌ நிவாரணமான .4,லட்சம் ஆக மொத்தம்‌ரூ.7 லட்சத்து 12 ஆயிரத்து 200 க்கான ஆணையினை முதலமைச்சர்‌ ரங்கசாமி ஏற்கனவே வழங்கினார்‌இதனைத்தொடர்ந்து ஆதிதிராவிடர்‌ நலம்‌ மற்றும்‌பழங்குடியினர்‌ நலத்துறை சார்பில்‌ எதிர்பாராதவிபத்தில்‌ இறக்கும்‌ குடும்பத்தினருக்கு இழப்பீடுவழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ் ழ்‌ ரூ.10 இலட்சம்‌ இழப்பீட்டுத்‌ தொகையாக முதலமைச்சர்‌ ரங்கசாமி ஆர்த்தியின்‌ பெற்றோரிடம்‌ நேற்று சட்டப்பேரவையில்‌தனது அலுவலகத்தில்‌ வழங்கினார்‌. இந்நிகழ்ச்சியின் போது சபாநாயகர்‌ செல்வம்‌, அமைச்சர்‌ தேனீ ஜெயக்குமார்‌, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ கல்யாணசுந்தரம்‌, பிரகாஷ்குமார்‌, துறைஇயக்குநர்‌ இளங்கோவன்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

விஷ வாயு தாக்கி உயிரிழந்த 3 பெண்களின் குடும்பத்திற்கு ரூ.70 லட்சம் நிவாரண நிதி அறிவித்தார் முதலமைச்சர்

புதுச்சேரியில் உள்ள ரெட்டியார்பாளையம் கனகன் ஏரிக்கு அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. அந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விஷவாயு உற்பத்தியாகி பாதாள சாக்கடை வழியாக வீடுகளில் உள்ள கழிவறைக்குள் புகுந்துள்ளது. இதனால் ரெட்டியார்பாளையம் புதுநகர் 4-வது தெருவில் கழிவறைக்கு சென்றவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதில் மூதாட்டி செந்தாமரை, அவரின் மகள் காமாட்சி, செல்வராணி ஆகியோர் உயிரிழந்தனர். விஷ வாயு தாக்கியதால் பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமி, ஆரோக்கியதாஸ், பாலகிருஷ்ணா ஆகியோர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விஷ வாயு பரவிய பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வீடுகளில் கழிவறை வழியாக விஷவாயு பரவலாம் என முன்னெச்சரிக்கை விடப்பட்டது. அரசு தரப்பில் உடனடியாக அப்பகுதியில் 10 தெருக்களில் வசிக்கும் மக்கள் வெளியேறும்படி மைக் மூலம் எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில், விஷவாயு தாக்கி…

இனி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்கமாட்டேன் – அண்ணாமலை

2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ம.க, த.மா.க உடன் கூட்டணி அமைத்து களம் கண்ட பாஜக படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்திருந்தால் 35 இடங்களில் வென்றிருப்போம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த அண்ணாமலை அதிமுக கட்சியில் எடப்பாடி- வேலுமணி இடையே உட்கட்சி பூசல் இருப்பது போல் தெரிகிறது” என்று தெரிவித்தார். இதையடுத்து, எஸ்.பி.வேலுமணி கூறிய கூட்டணி தொடர்பான கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவு தெரிவித்தார். “அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து இருந்தால் 35 இடங்கள் கிடைத்திருக்கும் என்ற வேலுமணியின் கருத்து உண்மையே.அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து இருந்தால் திமுக இத்தனை இடங்களை பெற்றிருக்க முடியாது” என்று அவர் கூறினார். இப்படி அண்ணாமலையின் கருத்துக்கு மாறாக தமிழிசை பேசியது பாஜக…

என் படத்தை தை உலகளவில் பேமஸ் ஆக்கிய எலான் மஸ்க்கிற்கு ரொம்ப நன்றி- தப்பாட்டம் பட நாயகன்

டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க், அவருக்குச் சொந்தமான எக்ஸ் தளத்தில் தமிழ்ப் படமான ‘தப்பாட்டம்’ படத்தின் காட்சி ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்ட மீம்ஸ் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். ஒரு இளநீரை படத்தின் நாயகி ஸ்டிரா வைத்து குடிக்க, அந்த நாயகியின் வாயிலிருந்து ஒரு ஸ்டிராவை வைத்து நாயகன் குடிக்கும் ஒரு காட்சி அது. 2017ம் ஆண்டு முஜிபூர் ரஹ்மான் இயக்கத்தில் துரை சுதாகர், டோனா ரொசாலியோ நடித்த படமான ‘தப்பாட்டம்’ படத்தின் அந்த ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பல மீம்ஸ்களாக பல முறை பரவியிருக்கிறது. “ஐபோன், ஆப்பிள், டேட்டா” ஆகியவற்றை மையமாக வைத்து யாரோ ஒருவர் உருவாக்கிய மீம்ஸ் ஒன்றை இன்று எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார். ஒரு தமிழ்ப் படத்தை வைத்து உருவாக்கிய மீம்ஸை எலாக் மஸ்க் உலக அளவில் பிரபலமாக்கிவிட்டார். இந்நிலையில், தப்பாட்டம் படத்தின் கதாநாயகன்…

எல்லை பிரச்சனைகளில் கவனம் செலுத்தப்படும்: வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

பிரதமர் மோடியின் மந்திரி சபையில் அவருடன் சேர்த்து 61 பேர் பா.ஜ.க.வில் இருந்து மந்திரிகளாகி இருக்கிறார்கள். மீதமுள்ள 11 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. புதிதாக பதவியேற்றுக்கொண்ட மந்திரிகளுக்கு நேற்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. பிரதமர் மோடி பரிந்துரையின்பேரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இலாகாக்களை ஒதுக்கீடு செய்துள்ளார். இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதை அடுத்து மந்திரிகள் தங்களது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு இன்று காலை முதல் பணிகளை கவனிக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் வெளியுறவுத்துறை மந்திரியாக எஸ்.ஜெய்சங்கர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: ஜனநாயக நாட்டில் ஒரு அரசு தொடர்ச்சியாக 3 முறை தேர்ந்தெடுக்கப்படுவது பெரிய விஷயம். பிரதமர் மோடியின் தலைமையில் வெளியுறவுத்துறை சிறப்பாக செயல்படும் என முழுமையாக நம்புகிறேன். வெளியுறவுத்துறை மந்திரி பொறுப்பு மீண்டும் ஒருமுறை வழங்கப்பட்டுள்ளது. இது…