பரபரப்பாக நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்த போட்டி முடிந்த பிறகு உலகக் கோப்பையை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஸ்டைலாக வாங்கினார். இதை தொடர்ந்து அனைவரும் உலகக் கோப்பையை கையில் ஏந்தி கொண்டாடினர். அப்போது ஒரு ஓரமாக இருந்த இந்திய அணியின் பயிற்சியாளரை விராட் கோலி அழைத்து வந்து அவரிடம் கோப்பை வழங்கினார்.
இதனால் உணர்ச்சிவசப்பட்ட ராகுல் டிராவிட், கோப்பை கையில் ஏந்தி ஆக்ரோஷமாக ஆர்பரித்தார். அவருடன் சேர்ந்து அனைத்து வீரர்களும் இதனை கொண்டாடினர். இந்திய அணியின் கேப்டனாகவோ, ஒரு வீரராகவோ உலகக்கோப்பையை கையில் ஏந்தி சாதிக்க முடியாத ராகுல் டிராவிட், ஒரு பயிற்சியாளராக உலகக்கோப்பையை கைகளில் ஏந்தி தனது ஏக்கத்தை தணித்திருக்கிறார். அவர் உணர்ச்சிவசப்பட்டு கொண்டாடியது ஒவ்வொரு வீரரின் உலகக்கோப்பை ஏக்கத்தை வெளிக்காடியதாக இருந்தது.