மகளுடன் தேநீர் அருந்திய சிறுவனைக் கட்டிவைத்து அடித்த தந்தை

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வழக்கறிஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து 17 வயது சிறுவனை கடத்தி சென்று கொடுமைப்படுத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அந்த சிறுவனை உயிருடன் காவல்துறையினர் மீட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய கல்யாண்பூர் காவல் உதவி ஆணையர் அபிஷேக் பாண்டே, “பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவன் மருந்தகம் இளங்கலை படிப்பு படித்து வருகிறார். அந்த சிறுவன் தனது வகுப்பு தோழியுடன் ஒரு கடையில் கூலட்ரிங்க்ஸ் குடித்துள்ளார். இதனை பார்த்த பெண்ணின் தந்தை அந்த சிறுவனை தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தி சென்று கொடுமைப்படுத்தியுள்ளார்.

அந்த சிறுவனை கொலை செய்து விடுவேன் என்றும் பெண்ணின் தந்தை மிரட்டியுள்ளார். மீட்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.

சிறுமியின் தந்தையான வழக்கறிஞர் பிரஜ் நரேன் நிஷாத் மற்றும் அவரது சகோதரர் தேஜ் நரேன் மீது கடத்தல், கொலை முயற்சி உட்பட பல பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

அதே சமயம் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகப் பாதிக்கப்பட்ட சிறுவன் மீது போஸ்கோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்களின் கடும் அழுத்தத்தின் காரணமாகவே இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment