ஐபிஎல் பைனலில் ஐதராபாத்தை வீழ்த்தியது 3வது முறையாக கொல்கத்தா சாம்பியன்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கொல்கத்தா அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தொடக்கத்திலேயே பந்துகள் நன்கு ஸ்விங் ஆகின. அதேவேளையில் சீரான பவுன்ஸும் இருந்தது. மேலும் பந்தை இறுகப்பிடித்து வீசமுடிந்ததால் சரியான திசையில் பந்துகளை வீசி கொல்கத்தா அணி வீரர்கள் அழுத்தம் கொடுத்தனர்.

குர்பாஸ் உடன் இணைந்த வெங்கடேஷ் அய்யர் அதிரடியாக விளையாடி ரன் குவிக்க, கொல்கத்தா அணியின் வெற்றி உறுதியானது. குர்பாஸ் – வெங்கடேஷ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்து அசத்தியது. குர்பாஸ் 39 ரன் (32 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஷாபாஸ் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வெங்கடேஷ் அய்யர் 52 ரன் (26 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் கம்மின்ஸ், ஷாபாஸ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். ஏற்கனவே 2012, 2014ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தற்போது 3வது முறையாக கோப்பையை வசப்படுத்தியது.

Related posts

Leave a Comment