விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியிருப்பதாவது:-
முருகன் தமிழ் கடவுள் என்றால் அவன் அப்பன் சிவனும் தமிழ் கடவுளாக தானே இருக்க முடியும்.
முருகன் தமிழ் கடவுள் என்றால், சிவனும் தமிழனாக இருந்தால் பார்வதியும் தமிழச்சியாகத் தான் இருக்க முடியும்.
இவர்கள் இருவரும் கையிலாய மலையில் இருக்கிறார்கள் என்றால், கையிலாயம் தமிழகத்தின் தேசம் தானே. அப்போது ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழர்களின் தேசம் தானே.
எங்கள் தமிழன் சிவப்பெருமான் கையிலாயத்தில் குடியிருக்கிறான் என்றால், கையிலாய மலையும் தமிழனுக்கு சொந்தம். அதனால், கையிலாயம் முதல் கன்னியாகுமரி வரை தமிழன் வாழ்ந்தான் என்பதற்கு சிவப்பெருமானே ஒரு சான்று.
சிவன் தமிழன், பார்வதி தமிழச்சி, முருகன் தமிழன் என்றால், கணேசனும் தமிழர் தானே. அப்போ, கணேசனை ஏன் தமிழ் கடவுள் என்று யாரும் கூறுவதில்லை? இவ்வாறு நாம் லாஜிக்கா கேட்டால் கோபம் வருகிறது.
எங்களுடைய அடையாளங்களையும், வரலாறுகளையும் திருடிக் கொண்டு, அதற்கு புதிய புதிய அடையாளங்களை தந்து, புதிய புதிய விளக்கங்களைத் தந்து, எங்களை ஏய்த்து பாடுபடுத்தி, பிளவுப் படுத்தி, சிதறிடித்து சிதைத்துக் கொண்டிருப்பதை அம்பேத்கரின் பிள்ளையாக இருந்துக் கொண்டு எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும்?
நாங்கள் இயக்கம் கொண்டிருப்பது பாராளுமன்றத்தில், சட்டமன்றத்தில் சீட்டிற்கு பேரம் பேசுவதற்காக அல்ல.
என்றாக்காவது ஒருநாள், நான் திடீரென தேர்தல் பாதை வேண்டாம் என்றுக் கூட சொல்லிவிடுவேன்.
அந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு என்னுடன் வாருங்கள் என்று நான் போய்க்கொண்டே இருப்பேன்.
இவர்கள் நம்மை சராசரியாக எடைப்போடுகிறார்கள். இந்த சீட்டிற்காக, நோட்டிற்காக என அவர்கள் புத்தி அவ்வளவுதான்.இவ்வாறு அவர் கூறினார்.