சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு, 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. சென்னையில் 2015 ஆம் ஆண்டில் ஜூன் 29 ஆம் தேதியில்தான் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கி, இன்றுடன் 10 நிறைவு பெற்றதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2015-ல் முதற்கட்டமாக கோயம்பேடு – ஆலந்தூர் இடையே தொடங்கப்பட்ட மெட்ரோ சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், தற்போது இரண்டாம் கட்டப் பணியும் நடைபெற்று வருகிறது. ரூ. 63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் இரண்டாம் கட்டப் பணி நடைபெற்று வருகிறது.
Category: சென்னை
பாலியல் உணர்வை தூண்டும் கொகைன்
தமிழ் திரை உலகில் பிரபல நடிகராக இருந்து வரும் ரோஜா கூட்டம் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்த குற்றத்திற்காக கைது செய்யப் பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொகைன் மற்றும் மெத்த பெட்டமைன் போதைப்பொருட்களை இவர் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து இவரது பின்னணியில் இருப்பவர்களை பிடிப்பதற்கு போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள். இந்த இரண்டு போதைப்பொருள்களும் சென்னை மாநகரில் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கும் அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது.சென்னையில் வார இறுதி நாட்களில் பண்ணை வீடுகள் மற்றும் நடன அரங்குகளில் நடைபெறும் விருந்துகளில் மதுவுடன் கொகைன் மற்றும் மெத்த பெட்டமைன் போதைப்பொருட்கள் இரண்டுமே சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருக்கும் அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இளைஞர்களின் உடல் நலனை பாதிக்கும் வகையில்…
செம்பரம்பாக்கம் ஏரியில் துணை முதலமைச்சர் ஆய்வு
சென்னையில் பெய்து வரும் மழையால் இடைவிடாது தொடர்ந்து பணியாற்றி வரும் மாநகராட்சி முன்கள பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணவு மற்றும் உதவிப் பொருட்களை வழங்கினார். சேப்பாக்கத்தில் உள்ள தொகுதி சட்டமன்ற அவலகத்துக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் சாலை பணியாளர்களுக்கு இந்த நிவாரண பொருட்களை வழங்கினார். போர்வை, பிரட், பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றுடன் உதவித் தொகையையும் அவர் வழங்கினார். இதைத்தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர் வந்து கொண்டிருப்பதால் துணை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். நீர் இருப்பு, நீர்வரத்து, நீர்மட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
சென்னையில் 21 சுரங்கப் பாதையில் போக்குவரத்து சீரானது!
சென்னையில் 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தேங்கிய 542 இடங்களில் மழை நீர் அகற்றப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அதிக பாதிப்பு ஏற்படவில்லை. சென்னையில் நேற்று 131 மி.மீ. மழை பெய்தபோதும் அதிகளவில் பாதிப்பில்லை. சுரங்கப்பாதைகளில் தேங்கிய நீர் உடனடியாக அகற்றப்பட்டன. சென்னையில் 300 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்துவந்த நிலையில், நேற்றிரவு முதல் மழை படிப்படியாக குறைந்து மிதமான மழையே பெய்து வருகின்றது. சென்னை மெட்ரோ ரயில்கள் மற்றும் மாநகரப் பேருந்துகள் வழக்கம்போல் அனைத்து வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மழை, வெள்ளம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்
சென்னையில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் யானைகவுனி பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று கனமழையும், நாளையும் அதி கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, சென்னையில் நேற்று இரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் தேங்கிய நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து மழை, வெள்ளம் குறித்த பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். யானைக்கவுனி பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதியில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து சென்னை பெரம்பூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து துய்மை பணியாளர்களுடன் தேநீர் குடித்தார்.அவர்களுக்கு பிஸ்கட்வழங்கினார்.
மறைந்தார் முரசொலி செல்வம்- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
“நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை இழந்து நிற்கிறேன்” – முரசொலி செல்வம் மறைவு; முதல்வர் ஸ்டாலின் உருக்கம்! “நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன். என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கட்சியிலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்” என்று முரசொலி செல்வம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மறைந்த முதல்வர் கருணாநிதியின் மருமகனும், அவரது மனசாட்சியான முரசொலி மாறனின் இளவலும், தங்கை செல்வியின் கணவருமான என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கி, வேதனைக் குருதியை வடியச் செய்கிறது. கருணாநிதியின் மூத்த பிள்ளையான முரசொலியின் பணிகளைத் தன் தோளில் சுமந்துகொண்டு இளமைப் பருவம் முதலே திறம்படச்…
சென்னையில் பா.ம.க.வினர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் போலீசார் தடுத்து நிறுத்தினர்
இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்களை பாதுகாக்க கோரியும், தற்போது இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க கோரியும், மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கோரியும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை இன்று முற்றுகையிட போவதாக பா.ம.க. அறிவித்திருந்தது. அதன்படி வள்ளுவர் கோட்டம் அருகே பா.ம.க.வினர் திரண்டனர். இந்த போராட்டத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, பா.ம.க. பொருளாளர் திலகபாமா ஆகியோர் தலைமை தாங்கினர். மேலும் சத்ரிய நாடார் இயக்க நிறுவனர் சந்திரன் ஜெயபால், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் நாடார், நெல்லை தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்க தலைவர் ஆனந்தராஜ், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மீனவர் கிராமங்களான தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம்…
கலைஞர் நூற்றாண்டு பூங்கா தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை கத்தீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நினைவை போற்றுவதற்காக சென்னை கோபாலபுரம் கதீட்ரல் சாலையில் செம்மொழிப் பூங்காவுக்கு எதிரில் செங்காந்தள் பூங்காவுக்கு அருகில் 6.09 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ரூ.45 கோடியே 99 லட்சம் செலவில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவின் நுழைவுவாயிலில் உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளமுள்ள ஜிப்லைன் எனப்படும் கம்பியில் தொங்கியபடி செல்லும் சாகச பயணம், பார்வையாளர்களை படம்பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம், தொடர் கொடி வளைவுப்பாதை, 120 அடி பனி மூட்டப்பாதை, 2,600 சதுர அடி நீளமுள்ள ஆர்க்கிட் குடில், அரியவகை கண்கவர் பூச்செடிகளை காட்சிப்படுத்த 16 மீட்டர் உயரத்துடன் 10 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவைகளை…
நேற்று கைதான ரவுடி சீசிங் ராஜா சுட்டுக்கொலை
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டி வந்த வீடு முன்பு அவரை ரவுடிக் கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிக் கொன்றது. தமிழகம் முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். வேலூர் சிறையில் இருந்த பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகனும் காங்கிரஸ் பிரமு கருமான அஸ்வத்தாமன், பெண் தாதா அஞ்சலை உள்பட 28 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்தனர். தி.மு.க., அ.தி.மு.க., த.மா.கா.வை சேர்ந்த அரசியல் பிரமுகர்களும் கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களில் 25 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.ஆம்ஸ்ட்ராங் கொலையில் கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவுக்கும் தொடர்பு…
கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் எம்எல்ஏ திறந்தார்
ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, வினாடிக்கு 1,600 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், படிப்படியாக 2,000 கன அடியாக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணா நீரை, நெல்லூர் மாவட்டம் வெங்கடகிரி சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணா திறந்து வைத்தார். சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.