நடிகர் டெல்லி கணேஷ் (80) உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக இன்று(நவ. 10) காலமானார். நடிகர் டெல்லி கணேஷின் உடல் ராமபுரத்தில் உள்ள அவரது வீட்டில்பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அவரது இறுதிச் சடங்குகள் நாளை காலை 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும் என்று குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.நாடகத்துறையில் இருந்து பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகராக அறிமுகமானவர் நடிகர் டெல்லி கணேஷ். தொடர்ந்து பசி, அபூர்வ சகோதரர்கள், தாயா தாரமா, மனிதன், நாயகன், சிந்து பைரவி, அவ்வை சண்முகி, ஆஹா, லண்டன், மாசிலாமணி உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு இந்திய விமானப்படையில் 10 ஆண்டுகள் பணியாற்றினார். நகைச்சுவை, வில்லன், குணசித்திரம் என பன்முக பாத்திரங்களில் நடித்தவர்…
Category: தமிழ்நாடு
டாஸ்மாக்கில் பில்லிங் சிஸ்டம் அரசு அதிரடி திட்டம்
டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குடிப்பிரியர்களிடம் இருந்து தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதனால், கூடுதல் கட்டணத்தை தடுக்கும் வகையில் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, டாஸ்மாக்கில் வாங்கும் மதுவுக்கு பில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, காஞ்சிபுரத்தில் மாவட்ட மேலாளர் தலைமையில் நாளை மற்றும் நாளை மறுநாள் தாலுகா வாரியாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் 2 வாரங்களில், வாங்கும் மது பாட்டில்களுக்கு பில் கொடுப்பது நடைமுறைக்கு வருகிறது. மேலும், டாஸ்மாக் கடைகளை கணினி மூலம் ஒருங்கிணைக்க தனி ‘சாப்ட்வேர்’ உருவாக்கி டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. இதன்மூலம், கடையில் எவ்வளவு மது இருப்பு மற்றும் விற்பனை குறித்த விவரங்களை கணினி மூலம் அறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் பட்டியல்இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். பட்டியல் இனமக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக்கொண்டு அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது. அவ்வகையில் 2024 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழுவிவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணையதளத்திலிருந்து இவ்விருதுக்கான விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலகம். சென்னை-05 அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மகனின் திருமண நிகழ்ச்சியில் -திமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் உயிரிழப்பு
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று உயிரிழந்துள்ளார். திருப்பதியில் தனது மகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது. ஆனால், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே செல்வராஜின் உயிர் பிரிந்துள்ளது. நாளை காலை அவரது உடல் கோவை கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அதிமுகவில் இருந்தபோது எம்.எல்.ஏ.வாக இருந்த செல்வராஜ் பின்னர் திமுகவில் இணைந்தார். இதைதொடர்ந்து, கோவை செல்வராஜ் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அமரன் படத்தை தடை செய்ய கோரி எஸ்.டி.பி.ஐ. போராட்டம்
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் “அமரன்.” தீபாவளி பண்டிகையன்று வெளியான அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலையும் வாரி குவிக்கிறது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள், பொது மக்கள் மட்டுமின்றி திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில், அமரன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி கோயம்புத்தூரில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அமரன் திரைப்படம் சிறுபான்மையினரை தவறாக சித்தரித்து இருப்பதாக கூறி எஸ்.டி.பி.ஐ. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. திரையரங்கம் முன்பு போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், போலீசார் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அமரன் படத்தை தடை செய்யக்கோரி போராட்டம்…
பேராசிரியர் மா.செல்வராசனுக்கு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினை சென்னை பல்கலைக்கழக முன்னாள் தமிழ் பேராசிரியர் முனைவர் மா. செல்வராசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்,2024 ஆம் ஆண்டிற்கான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்ட சென்னைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மா. செல்வராசனுக்கு கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், வெண்கலத்தாலான கலைஞர் மு. கருணாநிதி திருவுருவச்சிலையும் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார். முத்தமிழறிஞர் கலைஞரின் பெருமுயற்சியால் இந்தியாவில் முதன்முறையாகத் தமிழ் மொழியானது 2004-ஆம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. செம்மொழித் தமிழுக்கெனத் தனித்தன்மையுடன் ஒரு நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என்ற முத்தமிழறிஞர் கனவினை…
பாம்பு கடி அறிவிக்கை செய்யக்கூடிய நோய்: தமிழக அரசு அறிவிப்பு
பாம்புக் கடியினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அதனை `அறிவிக்கை செய்யக்கூடிய நோயாக’ தமிழக அரசு அறிவித்துள்ளது. நடப்பாண்டின் ஜூன் மாதம் வரையில், தமிழ்நாட்டில் 7,300 பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பதிவாகியுள்ளது. அவர்களில் 3 பேர் பலியாகியுள்ளனர். கடந்தாண்டில் 19,795 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 43 பேர் பலியாகியிருந்தனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் பாம்பு கடிக்கு போதிய மருந்துகள் இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இருப்பினும், தமிழ்நாட்டின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், பாம்பு கடிக்கான போதிய மருந்துகள் கையிருப்பில் இருப்பதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பொதுசுகாதாரச் சட்டம் 1939-ன் கீழ், தமிழ்நாடு அரசு பாம்பு கடியை “அறிவிக்கை செய்யக்கூடிய நோயாக” தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நவ. 6 ஆம் தேதியில் தமிழ்நாடு அரசிதழில்…
90 ஆண்டுகளில் முதல் முறையாக தூர்வாரப்படும் மேட்டூர் அணை- தமிழக நீர்வளத்துறை திட்டம்
1934ம் ஆண்டில் கட்டப்பட்ட மேட்டூர் அணை ஏறத்தாழ 90 ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் உள்ளது. இந்நிலையில், 90 ஆண்டுகளில் முதல் முறையாக மேட்டூர் அணை தூர்வாரப்பட உள்ளதாக தமிழக நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, சோதனை அடிப்படையில் மேட்டூர் அணையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தூர்வார தமிழ்நாடு நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, சுற்றுச்சூழல், வனத்துறை அனுமதியை பெற ஆலோசர்களை நியமனம் செய்ய நீர்வளத்துறை டெண்டர் கோரியுள்ளது. மத்திய அரசின் நீர் மற்றும் மின்சார ஆலோசனை சேவை மையம், தமிழக நீர்வளத்துறை இணைந்து சாத்தியக் கூறு அறிக்கையை தயார் செய்துள்ளது. சாத்தியக்கூறு அறிக்கையின்படி, மேட்டூர் அணையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் 1.40 லட்சம் யூனிட் வண்டல் மண் தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது.
வெம்பக்கோட்டை அகழாய்வில் ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுப்பு!
வெம்பக்கோட்டை அகழாய்வில் ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவிவித்துள்ளார். விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண் கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை கண்ணாடி மணிகள் கல் மணிகள், சூது பவள கல் மணிகள், முழுமையான சங்கு வளையல், பழங்கால சிகை அலங்காரத்துடன்கூடிய பெண்ணின் தலைப் பகுதி, கி.பி. 16-ஆம் நூற்றாண்டு நாயக்கா் கால செப்புக் காசு, அணிகலன்கள், திமிலுடன்கூடிய காளை உருவப் பொம்மை உள்ளிட்ட 1,800-க்கும் மேற்பட்ட பொருள்கள் அகழாய்வில் கிடைத்துள்ளன. இந்த நிலையில், விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் பழமையான அணிகலன் தயாரிப்பு மற்றும் வேட்டையாடப் பயன்படும் கருவிகள்…
எந்த திசையில் யார் வந்தாலும் தி.மு.க.வுக்கே வெற்றி – விஜய்-க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி
நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் வைத்து தன் கட்சி கொள்கைகளை அறிவித்து, தனது அரசியல் மற்றும் கொள்கை எதிரிகள் யார் யார் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். அப்போது, தி.மு.க. கட்சியை நடிகர் விஜய் விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் நடிகர் விஜய்யின் மாநாடு நடைபெற்ற விக்கிரவாண்டியை அடுத்த திருவெண்ணெய்நல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பிறகு பேசிய அவர் நடிகர் விஜய்-க்கு பதிலடி கொடுத்தார். “எந்த திசையில் இருந்து யார் வந்தாலும் தி.மு.க.வுக்கே வெற்றி கிடைக்கும். டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, லோக்கலில் இருந்து வந்தாலும் சரி, தி.மு.க.வுக்கே வெற்றி. 2026…
