புதுவை ஆண்டியார்பாளையத்திற்கு மீண்டும் பேருந்து சேவை சபாநாயகர் தொடங்கிவைத்தார்


மணவெளி சட்டமன்ற தொகுதி தவளக்குப்பம் கொருக்கமேடு வழியாக ஆண்டியார்பாளையம்  செல்லும் பி ஆர் டி சி  மினி பஸ் சேவையானது பேருந்து பற்றாக்குறை காரணமாக  கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
சட்டப்பேரவை தலைவர் செல்வம் கொருக்கமேடு ஆண்டியார்பாளையம் ஆகிய பகுதி மக்களின் நலன் கருணை பி ஆர் டி சி அதிகாரிகளை அழைத்துப் பேசி உரிய நடவடிக்கை எடுத்து மேற் சொன்ன வழித்தடத்தில் மீண்டும் மினி பஸ் சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்தார்.

அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை தலைவர்  நேற்று ஆண்டியார்பாளையம் பகுதியில் இருந்து இந்த மினி பஸ் சேவையை தொடங்கி வைத்து அப்பேருந்தில் பொதுமக்களுடன் பயணம் செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிஆர்டிசி பொது மேலாளர்  கலியபெருமாள் மேலாளர்  ராதாகிருஷ்ணன் மற்றும் அப்பகுதி முக்கிய நிர்வாகிகள் மாவட்ட தலைவர் சுகுமாரன் ஜி.ஆர். செந்தில் ஜி ரமேஷ் கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குனர் சக்திவேல் மாவட்டத் துணைத் தலைவர் மணிகண்டன் சடகோபன் சிவா வாழுமுனி ரமேஷ் முருகேசன்  மதியழகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment