பிரபல அரசியல் விமர்சகரும் யூடியூபருமான சவுக்கு சங்கர் திடீர் நெஞ்சுவலியால் காரணமாக சென்னை வடபழனி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பெண் காலவர்கள் குறித்து நேர்காணலில் அவதூறாக பேசியது உட்பட பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறையில் இருந்த சவுக்கு சங்கர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளது குறிப்பிடத்தக்கது.
Category: தமிழ்நாடு
ஆயுத பூஜை, விஜயதசமி: தவெக தலைவர் விஜய் வாழ்த்து
யுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகளையும், பயன்படுத்தும் வாகனங்களையும், அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து புதிய முயற்சிகளிலும் வெற்றி உண்டாகி, அனைவரின் வாழ்வும் தழைத்தோங்க இனிய நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
மறைந்தார் முரசொலி செல்வம்- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
“நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை இழந்து நிற்கிறேன்” – முரசொலி செல்வம் மறைவு; முதல்வர் ஸ்டாலின் உருக்கம்! “நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன். என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கட்சியிலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்” என்று முரசொலி செல்வம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மறைந்த முதல்வர் கருணாநிதியின் மருமகனும், அவரது மனசாட்சியான முரசொலி மாறனின் இளவலும், தங்கை செல்வியின் கணவருமான என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கி, வேதனைக் குருதியை வடியச் செய்கிறது. கருணாநிதியின் மூத்த பிள்ளையான முரசொலியின் பணிகளைத் தன் தோளில் சுமந்துகொண்டு இளமைப் பருவம் முதலே திறம்படச்…
நீட் தேர்வு ரத்துக்கு திமுக அரசு எதையும் செய்யவில்லை- இ.பி.எஸ்.
சேலம் எடப்பாடியில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவி புனிதா வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மறைந்தார் முரசொலி செல்வம்-தமுதல்வர் ஸ்டாலின் இரங்கல்
“நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை இழந்து நிற்கிறேன்” – முரசொலி செல்வம் மறைவு; முதல்வர் ஸ்டாலின் உருக்கம்! “நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன். என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கட்சியிலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்” என்று முரசொலி செல்வம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மறைந்த முதல்வர் கருணாநிதியின் மருமகனும், அவரது மனசாட்சியான முரசொலி மாறனின் இளவலும், தங்கை செல்வியின் கணவருமான என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கி, வேதனைக் குருதியை வடியச் செய்கிறது. கருணாநிதியின் மூத்த பிள்ளையான முரசொலியின் பணிகளைத் தன் தோளில் சுமந்துகொண்டு இளமைப் பருவம் முதலே திறம்படச்…
சென்னையில் பா.ம.க.வினர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் போலீசார் தடுத்து நிறுத்தினர்
இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்களை பாதுகாக்க கோரியும், தற்போது இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க கோரியும், மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கோரியும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை இன்று முற்றுகையிட போவதாக பா.ம.க. அறிவித்திருந்தது. அதன்படி வள்ளுவர் கோட்டம் அருகே பா.ம.க.வினர் திரண்டனர். இந்த போராட்டத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, பா.ம.க. பொருளாளர் திலகபாமா ஆகியோர் தலைமை தாங்கினர். மேலும் சத்ரிய நாடார் இயக்க நிறுவனர் சந்திரன் ஜெயபால், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் நாடார், நெல்லை தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்க தலைவர் ஆனந்தராஜ், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மீனவர் கிராமங்களான தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம்…
அரியானா சட்டசபை தேர்தல்:வினேஷ் போகத்துக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து!
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், மல்யுத்த வீராங்கனையுமான வினேஷ் போகத் தனது வெற்றியைப் பதிவு செய்தார். இதுகுறித்து தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வினேஷ் போகத்தை வாழ்த்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வினேஷ் போகத் ஹரியாணாவில் ஜூலானா சட்டபேரவைத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றுள்ளார். மக்களுக்கான பிரதிநிதியாக மக்கள் சேவையின் இந்த புதிய அத்தியாயத்தில் அவர் சிறப்பான வெற்றிபெற வாழ்த்துகிறேன். பாசிச சக்திகளுக்கு எதிராக அவரது ஆற்றல் தொடரட்டும்” எனப் பதிவிட்டுள்ளார். முன்னதாக, ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாஜகவின் யோகேஷ் குமாரைவிட 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வினேஷ் போகத்…
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள்- கிரிக்கெட் விளையாட்டு
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் வளாகத்தில் நேற்றிரவு 10-க்கு மேற்பட்ட தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அப்போது கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த விசிக நிர்வாகி இளையராஜா (40) தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். விசிக நிர்வாகி வீடியோ எடுத்ததற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது கோவிலில் கிரிக்கெட் விளையாடலாமா? இது ஆகம விதிக்கு எதிரானது தானே? இதேபோல் அனைவரையும் கிரிக்கெட் விளையாட அனுமதிப்பீர்களா? என கேட்டபோது இது எங்க கோயில் நாங்க எது வேண்டுமானாலும் செய்வோம் அதனை கேட்க நீ யார்? என்று ஒருமையில் தீட்சிதர்கள் பேசியுள்ளனர். பின்னர் அங்கிருந்த தீட்சிதர்கள் இளையராஜாவை அடித்து அவரது செல்போனை பறித்துள்ளனர். இதுகுறித்து இளையராஜா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து தீட்சிதர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு…
அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் பொறுப்புகளில் இருந்து நீக்கம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தை அமைப்பு செயலாளர் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆகிய கட்சி பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கட்சியின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு பூங்கா தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை கத்தீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நினைவை போற்றுவதற்காக சென்னை கோபாலபுரம் கதீட்ரல் சாலையில் செம்மொழிப் பூங்காவுக்கு எதிரில் செங்காந்தள் பூங்காவுக்கு அருகில் 6.09 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ரூ.45 கோடியே 99 லட்சம் செலவில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவின் நுழைவுவாயிலில் உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளமுள்ள ஜிப்லைன் எனப்படும் கம்பியில் தொங்கியபடி செல்லும் சாகச பயணம், பார்வையாளர்களை படம்பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம், தொடர் கொடி வளைவுப்பாதை, 120 அடி பனி மூட்டப்பாதை, 2,600 சதுர அடி நீளமுள்ள ஆர்க்கிட் குடில், அரியவகை கண்கவர் பூச்செடிகளை காட்சிப்படுத்த 16 மீட்டர் உயரத்துடன் 10 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவைகளை…
