சென்னை கலைவாணர் அரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கிய விழாவில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். ரூ.100 முகமதிப்பு கொண்ட அந்த நாணயத்தில் ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. பின்னர் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,’’சொல்ல முடியாத மகிழ்ச்சியின் உள்ளேன். நா நயம் மிக்க தலைவருக்கு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை நாம் கொண்டாடினோம். இன்று இந்தியாவே கருணாநிதியை கொண்டாடுகிறது. கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிட என் முதல் தேர்வாக இருந்தது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்தான். பல அரசியல் மாறுமாடுகள் இருந்தாலும், அனைத்துக் கட்சியினருடனும் இணக்கமாக உள்ள ராஜ்நாத் சிங், கருணாநிதி நாணயத்தை வெளியிட சிறந்த தேர்வு. நாணயத்தை வெளியிட ராஜ்நாத் சிங்கை அனுப்பிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. சுதந்திர…
Category: தமிழ்நாடு
மகளிர் உரிமைத்தொகை குறித்து வதந்தி- முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் கீதாஜீவன்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் தமிழகத்தில் சுமார் 1½ கோடிக்கும் அதிகமான பெண்களின் வங்கி கணக்கில் ரூ.1,000 மாதந்தோறும் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக விண்ணப்பித்தவர்களில் சிலரது விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகங்களில் விண்ணபிக்க பெண்கள் குவிந்தனர். இதை அறிந்த அதிகாரிகள் இது தவறான தகவல் என தெரிவித்தனர். இதை ஏற்க மறுத்து சில இடங்களில் அதிகாரிகளுடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:- மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு முதலில் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பங்கள் செய்யுங்கள் என்று முதல்-அமைச்சர்…
25 ஆயிரம் பாடல்களை பாடிய பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு சிறுநீரகம்பாதிப்பு மருத்துவமனையில் அனுமதி
சினிமா பின்னணி பாடகி பி.சுசீலா தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒடியா, சமஸ்கிருதம், துளு மற்றும் படகா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். கடந்த மார்ச் மாதம் திருப்பதியில் பிரபல பின்னணி பாடகி சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்நிலையில், பின்னணி பாடகி பி.சுசீலா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது மூப்பு மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது.
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஈரோடு, திருப்பூா், கோவை மாவட்டங்களின் மூன்று தலைமுறை கனவுத் திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக சனிக்கிழமை(ஆகஸ்ட்17) தொடங்கிவைத்தார். கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களைச் சோ்ந்த 1,045 குளம், குட்டைகளில் நீா் நிரப்பி அதன் மூலமாக நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவது மற்றும் விவசாயம், குடிநீா் உள்ளிட்ட தேவைகளுக்காக தொடங்கப்பட்டதுதான் அத்திக்கடவு-அவிநாசி திட்டம். 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி 2016-ஆம் ஆண்டு அவிநாசியில் பலரும் தொடா் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஆய்வுப் பணிகளுக்கான ஆரம்ப கட்ட நிதியாக ரூ. 3.27 கோடியை ஒதுக்கினாா். அதைத்தொடா்ந்து அரசாணை வெளியிட்டாா். அவிநாசியில் 2017-ஆம் ஆண்டு ஒரு நாள் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. பின்னா் ஜெயலலிதா மறைவைத் தொடா்ந்து 2018-ஆம் ஆண்டு ரூ. 250 கோடி…
பெண் பணியாளர்களுக்கான சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
பாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.706.50 கோடி மதிப்பில் பெண் பணியாளர்கள் தங்கும் சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் ஸ்ரீபெரும்புதூர் வல்லம்-வடிகால் கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது. இதில் 18,720 பெண் பணியாளர்கள் தங்கி பயன்பெறும் வகையில் மிக பிரமாண்டமாக இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தின் திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தக் குடியிருப்பு வளாகத்தை திறந்துவைத்தார். விழாவில் பாக்ஸ்கான் நிறுவன தலைவர் யாங் லீயு முன்னிலை வகித்தார். பெண் பணியாளர்கள் தங்கும் விடுதியை திறந்துவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் பாக்ஸ்கான் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஐபோன் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவிலேயே 2-வது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது.தொழில் வளர்ச்சியில் தனி கவனம்…
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்குபயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்
இந்தியா-இலங்கை இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 14-ந்தேதி ‘செரியாபாணி’ என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழை காரணமாக அதே மாதம் 23-ந்தேதி கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் ‘சிவகங்கை’ என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக அந்தமானில் இருந்து ‘சிவகங்கை கப்பல்’ நாகை துறைமுகத்திற்கு கடந்த வாரம் வந்தது. இந்த கப்பலுக்கான சோதனை ஓட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று காலை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த சிவகங்கை பயணிகள் கப்பலை புதுச்சேரி மந்திரி நமச்சிவாயம், நாகை மாவட்ட கலெக்டர் ஆகாஷ், செல்வராஜ் எம்.பி. ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, 44…
அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் தொடங்கியது. இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், 72 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கட்சி வளர்ச்சி குறித்தும், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கட்சியின் முப்பெரும் விழா குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், 2026 சட்டசபை தேர்தலிலும் வெற்றி வாகை சூட திட்டம் தீட்டி வருகிறது. அந்த வகையில், மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னையில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரும், ஏனைய…
பொங்கல் திருநாள் முதல் “முதல்வர் மருந்தகம் திட்டம்” தொடக்கம்- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
நெடுஞ்சாலைத்துறையில் 180 பேருக்கு பணி நியமன ஆணை: மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் 414 இளநிலை வரைதொழில் அலுவலர்கள், 33 உதவிப் பொறியாளர்கள், 66 இளநிலை உதவியாளர்கள், 48 தட்டச்சர்கள், 6 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III, 4 தணிக்கை உதவியாளர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நேரடி நியமனத்திலும், 45 இளநிலை உதவியாளர்கள், 3 உதவி வரைவாளர்கள், 9 தட்டச்சர்கள், 27 பதிவுரு எழுத்தர்கள் மற்றும் 24 அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் கருணை அடிப்படையிலும் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நெடுஞ்சாலைத் துறையின் உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 180 நபர்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு,…
பட்டாசு ஆலையில் வெடி விபத்து – தமிழக முதல்வர் 3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டி பகுதியில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் லைசென்ஸ் உரிமத்துடன் ஜெயந்தி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில், பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து மற்றும் மூலப்பொருட்களை வாகனத்தில் இருந்து இறக்கும்போது திடீரென எதிர்பாராத விதமாக உராய்வால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு வேதனை அடைந்துள்ளதாகவும், உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்குவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், விபத்தில்…
