வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு தமிழகத்தின் கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனா ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து சென்று சிகிச்சை அளித்தது குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. செவிலியர் சபீனாவின் இந்த வீர செயலுக்காக அவருக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், தமிழக செவிலியர் சபீனாவுக்கு, வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செவிலியர் சபீனாவுக்கு, விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்க உள்ளார். வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தனது உயிரையும் பொருட்படுத்தாமல், துணிச்சலாக செயல்பட்டு சிகிச்சை அளித்தமைக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Category: தமிழ்நாடு
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவிநடிகை குஷ்பு விலகல்
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு, கடந்த 2020-ம் ஆண்டில் பா.ஜ.க.வில் இணைந்தார். 2021-ல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அதன்பின், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி குஷ்புவுக்கு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து குஷ்பு விலகினார். அவரது ராஜினாமா கடிதத்தை குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கியால் சுட்டு ரவுடியை பிடித்த எஸ்.ஐ. கலைச்செல்விக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் பாராட்டு
சென்னையில் கடந்த மாதம் 5-ந்தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின்னர் ரவுடிகள் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகரில் பணியாற்றி வரும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரும் ரவுடிகளை பிடிக்க இரவு பகலாக அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் சென்னை செனாய் நகரை சேர்ந்த ரவுடி ரோகித் ராஜையும் போலீசார் தேடி வந்தனர். ரவுடி ரோகித்ராஜ் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வி தலைமையிலான போலீசார் துப்பாக்கியுடன் ரவுடி ரோகித் ராஜை பிடிக்க களம் இறங்கினர். சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வியுடன், போலீஸ் ஏட்டுகள் பிரதீப், சரவண குமார் ஆகிய இருவரும் உடன் சென்றனர். கீழ்ப்பாக்கம்…
50 கோடி மோசடி புகாரில் வின் டிவி தேவநாதன் கைது
வின் டிவி உரிமையாளர் தேவநாதன் மயிலாப்பூர் இந்து சுசுவத நிதி லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது நிதி நிறுவன மோசடி செய்ததாக புகார் எழுந்தது. 140-க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்ததன் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு நிதி வைத்திருந்ததாகவும், பலர் உறுப்பினராகவும் இருந்ததாக கூறப்படுகிறது. ரூ. 50 கோடி வரை மோசடி என எழுந்த புகாரில் வின் டிவி தேவநாதனை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் முடிவடைந்த மக்களவை தேர்தல் பாஜக கூட்டணியில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
35 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “ராமநாதரபுரத்தை சேர்ந்த 35 மீனவர்கள் இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட சம்பவம் கவலை அளிப்பதாக தெரிவிப்பு 4 மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், நேற்று (19.8.2024) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆழ்ந்த வேதனையும் கவலை அளிப்பதாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.அண்மையில் 2 மீனவர்கள் உயிரிழந்த நிலையில் மீனவர் பிரச்சனை தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாட்டிலிருந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் சந்தித்ததை நினைவுகூர்ந்துள்ள முதலமைச்சர், அதற்குப் பின்னரும் குறிப்பிடத்தக்க நிவாரணமோ தீர்வோ ஏற்படவில்லை என்று வருத்தத்தோடு குறிப்பிட்டுள்ளார். அனைத்து மிவைர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவித்து…
தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மாணவ-மாணவிகள் உயர்கல்வி படிக்கும் நோக்கத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு பள்ளிகளில் படித்து விட்டு பின்னர் உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி, தமிழ்ப்புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் இன்று (9-ந் தேதி) காலை 11.30 மணியளவில் தொடங்கி வைத்தார். கோவை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் இதற்கான பிரமாண்ட விழா நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் தேர்வான மாணவர்களின் வங்கி கணக்கில் உடனடியாக ரூ.1000 செலுத்தப்படும் என்று…
அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வை நீதிமன்ற உத்தரவுபடி செயல்படுத்த வேண்டும் – அன்புமணி
நீதிமன்றத் தீர்ப்புகளைக் கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு குறித்த உயர் நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மறுப்பது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கையை 6 வாரங்களுக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டு, 6 மாதங்களுக்கு மேலாகியும் அதை நடைமுறைப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு தொடர்பான சிக்கலில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. திமுகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கொண்டு வந்த பல்வேறு சட்டங்கள், அரசாணைகள் குறித்து உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அளித்தத்…
தொடரும் அட்டூழியம்- தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு தவிக்கும் தமிழர்கள்மத்தியஅரசு நடவடிக்கை என்ன?
தமிழகத்தை சேர்ந்த 23 மீனவர்கள், 4 நாட்டுப் படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. புத்தாளம் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை சிறைபிடித்தது. இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கவேண்டும் யூ டியூபர் சவுக்கு சங்கர் வழக்கு
தனக்கு எதிரான 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரி பிரபல யூ டியூபர் சவுக்கு சவுக்கு சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா? என விளக்கமளிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது, ஒரு வழக்கில் ஜாமின் வழங்கினால் மற்றொரு வழக்கில் கைது செய்யப்படுவதாக சவுக்கு சங்கர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. அப்போது, அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா என சரிபார்க்க அவகாசம் வழங்க வேண்டும் னெ காவல் துறை தரப்பு கோரிக்கை வைத்தது. இந்நிலையில், காவல் துறையின் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சவுக்கு சங்கரின் மனு மீதான விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் தமிழக மு.க.ஸ்டாலின் மரியாதை
மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றது. ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு கீழ் உள்ள படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை அண்ணா சாலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை திமுக சார்பில் அமைதிப்பேரணி நடைபெற்றது. பேரணியில் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, எல்.எல்.ஏ.க்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேரணியை தொடர்ந்து மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர்கள், கனிமொழி எம்.பி., திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர் தூவி…
